பணவீக்கத்தை, அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்திவிட்டதாக பிரதமர் மோடி டமாரம் அடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள பொருளாதார நிலை குறித்த அறிக்கை, உணவுப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என்று ஒப்புக் கொண்டிருக்கிறது. நாட்டின் பணவீக்க விகிதம் சற்றும் குறையாமல் அதிகரித்து வருவதற்கு, எந்த விதத்திலும் குறையாத உணவுப் பொருட்களின் விலை உயர்வே முதன்மைக் காரணம் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. மக்களின் கைகளில் வாங்கும் சக்தி கணிசமான அளவில் சுருங்கியிருப்பதன் காரணமாகவே பணவீக்க விகிதம் அதிகரித்து வருகிறது. ‘மோடினாமிக்ஸ்’ எனப்படும் மோடி அரசின் நாசகர பொருளாதாரக் கொள்கைகள், வேலையின்மையும், பொருட்களின் விலைகளும் மிக மிக உச்சத்தை எட்டுவதற்கு வித்திட்டுள்ளன. பொருளாதாரத்தை அழித்து வருகின்றன.