வியாழன், அக்டோபர் 22, 2020

தமிழகம்

img

தோழர் கே.வரதராசன் படத்திறப்பு நிகழ்ச்சி

பெரம்பலூர்:
அகில இந்திய விவசாயிகள் சங்கத் தின் மறைந்த முன்னாள் பொதுச் செயலாளர் தோழர் கே.வரதராசன் படத்திறப்பு நிகழ்ச்சி, பெரம்பலூர் மாவட்டவிவசாயிகள் சங்கம் சார்பில் துறைமங்கலத்திலுள்ள சங்க அலுவலகத் தில் சனியன்று நடைபெற்றது. மக்களுக்கான மருத்துவர் கழக மாநிலச் செயலாளர் டாக்டர் சி.கருணாகரன் தலைமை வகித்தார். 

விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.செல்லதுரை, தோழர் கே.வரதராசன் உருவப்படத்தை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். சிபிஐ மூத்த தலைவர் வேணுகோபால், தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ஆர்.ராஜாசிதம்பரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திராவிடர் கழகம் தங்கராசு, அக்ரி ஆறுமுகம், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்டநிர்வாகி அபுபக்கர் சித்திக், தமுஎகசமாவட்டச் செயலாளர் பேரா. ப.செல்வகுமார், ராமர், சிபிஎம் மாவட்டச் செயற் குழு உறுப்பினர்கள் பி.ரமேஷ், எஸ்.அகஸ்டின், எ.கலையரசி, வட்டக்குழு பி.கிருஷ்ணசாமி, எம்.கருணாநிதி, செல்லதுரை, சீனிவாசன், ஆட்டோ சங்கம் சி.சண்முகம், ரெங்கநாதன், கரும்பு விவசாயிகள் சங்கம் ஏ.கே.ராஜேந்திரன், வரதராஜன், சாமிதுரை, எ.முருகேசன், சிபிஎம் வேப்பந்தைட்டை ஒன்றியச் செயலாளர் ராமு,விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பி.சின்னசாமி, அழகேசன், ராமச்சந்திரன், பசும்பலூர் கோயிந்தன், பச்சையா ஜெய்சங்கர், மணி, கோவிந்தராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.நிறைவாக சிபிஎம் பெரம்பலூர் ஆலத்தூர் ஒன்றியச் செயலாளர் எஸ்.பி.டி.ராஜாங்கம் நன்றி கூறினார்.

;