தமிழகம்

img

நாகப்பட்டினம் எம்பி செல்வராசு-க்கு கொரோனா... 

நாகப்பட்டினம்
தமிழகத்தில் மக்கள் பிரதிநிதிகளை கொரோனா தாக்குவது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 21 எம்எல்ஏ-க்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4 அமைச்சர்களும் அடங்கும். சேப்பாக்கம் திமுக எம்எல்ஏ அன்பழகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற நபர்களில் பாதி பேர் சிகிச்சையில் உள்ளனர். சிலர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

இந்நிலையில், நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் எம்பி-யாக இருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த செல்வராசுவுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அவர் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் எம்பி ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.  

;