வெள்ளி, அக்டோபர் 30, 2020

தமிழகம்

img

திருப்பூர் அரசு மருத்துவமனையில் மின்தடை: 2 நோயாளிகள் உயிரிழப்பு

திருப்பூர்  அரசு மருத்துவமனையில், மின்தடை காரணமாகச் செயற்கை சுவாசம் வழங்குவதில் தடை ஏற்பட்டதால், நோயாளிகள் 2 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.
 
திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், கொரோனா மற்றும் பல்வேறு நோய் பாதிப்புக்கு நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், இன்று 3 மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை ஏற்பட்டது. இதனால், ஆக்சிஜன் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டதால், செயற்கை சுவாசம் பெற்று வந்த நோயாளிகள் 2 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். அதன்பிறகு அரசு மருத்துவமனைக்கு மாவட்ட ஆட்சியர் விஜயக் கார்த்திகேயன்  நேரில் சென்று  ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மருத்துவக்கல்லூரி கட்டுமானப் பணியின்போது மின்வயர்கள் துண்டிக்கப்பட்டதால் மின்தடை ஏற்பட்டதாகவும், இந்தச் சம்பவத்தில் காண்ட்ராக்டர் அஜாக்கிரதையாகச் செயல்பட்டது தெரியவந்துள்ளதாகவும் கூறினார்.
மேலும், நோயாளிகள் உயிரிழப்பு தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் விளக்கமளித்தார்
 

;