ஞாயிறு, அக்டோபர் 25, 2020

தமிழகம்

img

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி:
தேசிய கல்விக் கொள்கையை திரும்ப பெற வேண்டும். நீட் தேர்வை ரத்துசெய்ய வேண்டும் உள்ளிட்டவை வலியுறுத்தியும், மத்திய மாநில அரசுகளைகண்டித்தும் நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சந்தானம், பாலு தலைமை தாங்கினர். வாலிபர்சங்க மாவட்டத் தலைவர் மேனகா, மாதர்சங்க மாவட்டச் செயலாளர் பி.கற்பகம், மாதர் சங்க மூத்த மல்லிகா, கிளை செய
லாளர் ராமர்கனி, ஜாக்குலின் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.

;