புதன், செப்டம்பர் 23, 2020

தமிழகம்

img

சென்னை விமான நிலைய ஊழியர்கள் 7 பேருக்கு தொற்று

சென்னை:
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்புப் படை நிர்வாக அலுவலகத்தில் ஏழு வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர்கள் பணியாற்றிய அறைகள் சீல் வைக்கப்பட்டன.

சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின்  நிர்வாக அலுவலகம் சென்னை விமான நிலைய வளாகத்தில் அமைந்துள்ளது. அங்கு பணியிலிருந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றது. இதில் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது.இதையடுத்து அந்த ஏழு பேரும் உடனடியாக சென்னை நந்தம் பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  மேலும், அவர்களோடு பணியிலிருந்த 15 பேர் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் பணியாற்றிய அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டன. பின்னர், மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தும் பணி விமான நிலைய சுகாதாரத் துறையினரால் மேற் கொள்ளப்பட்டது.

;