ஞாயிறு, நவம்பர் 29, 2020

tamilnadu

img

நூற்றாண்டு நிறைவு கொடியேற்று நிகழ்ச்சி...

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு அக்டோபர் 17 அன்று நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது.சென்னையில் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் செங்கொடியை ஏற்றி வைத்தார். இந்நிகழ்வில் மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன், பி.சம்பத், மாநிலச் செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், மாநிலக்குழு உறுப்பினர்கள் க.உதயகுமார், வெ.ராஜசேகரன், அலுவலக பொறுப்பாளர் வில்சன் உள்ளிட்டு கட்சித்தோழர்கள் கலந்து கொண்டனர்.

;