தமிழகம்

img

தலைமை ஆசிரியர் திட்டியதால் ஆசிரியை தற்கொலை முயற்சி 

சிவகங்கை
சிவங்ககை மாவட்டம் முகத்துப்பட்டி கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் சங்கீதா என்ற ஆசிரியர் பணியாற்றி வருகிறார். அறிவியல் துறை ஆசிரியையான சங்கீதாவை தலைமை ஆசிரியர் கீதாஞ்சலி   மாணவர்கள் முன்னிலையில் அவதூறாகத் திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த சங்கீதா ஆய்வறையில் இருந்த ரசாயனத்தைக் குடித்து தற்கொலை முயன்றுள்ளார். இதனைக் கண்ட சக ஆசிரியர்கள் சங்கீதாவை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.மயக்கத்தில் இருக்கும் சங்கீதாவுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சிவகங்கை நகர காவல்துறையினர் தலைமை ஆசிரியை கீதாஞ்சலியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

;