tamilnadu

img

குடும்ப வன்முறைகளுக்கு முடிவு கட்டுக... அரசுகளுக்கு மாதர் சங்கம் கோரிக்கை

சென்னை:

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின்  மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநிலப்பொதுச்செயலாளர் பி.சுகந்தி ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

  •  கொரோனா தடுப்பு நடவடிக்கையாக  ஊரடங்கு அமலாகி 50 நாட்களுக்கு மேலாகி விட்ட நிலையில் இந்தியா முழுவதிலும்.ஏராளமான  குடும்ப வன்முறைகள், பாலியல் வன்முறை மற்றும் பொருளாதார வன்முறைகளை பெண்கள் சந்தித்து வருகின்றனர்.இதை தேசிய, மாநில மகளிர் ஆணையங்களே வெளியிட்டுள்ளன.  
  •  விழுப்புரம் மாவட்டத்தில் ஜெயஸ்ரீ என்ற 16 வயது சிறுமி ஆளும் கட்சியான அதிமுககிளைசெயலாளரால் முன்பகை காரணமாக பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட கொடூரம் தமிழகத்தில் நடந்துள்ளது.   நேற்றைய தினம் தூத்துக்குடி மாவட்டம் புளியங்குளத்தில் வீட்டில் இருந்த சிறுமியை கும்பல் வல்லுறவு செய்ய முயற்சித்ததில் அச்சிறுமி தீயிட்டுகொளுத்தப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
  •  தமிழகத்தில்  இப்படியான வன்முறைகள் அதிகரித்து வந்து கொண்டிருக்கின்ற நிலைஒருபுறம், வறுமை, வேலையின்மை காரணமாக பெண்களுக்கு போதுமான உணவின்றி ஊட்டச்சத்து இல்லாது நிலை மறுபுறம்.    வருவாய்க்கு வழியின்றி மக்கள் தவித்துக்கொண்டுள்ளனர்.
  • உலக நாடுகள் பலவற்றிலும் ஊரடங்கு அமலாக்கிக் கொண்டிருப்பதால்  பெரும்பாலான ஏழை, எளிய பெண்கள்  போதுமான உணவுஇன்மையாலும், ஊட்டச்சத்து  குறைபாட்டாலும் எதிர் வருகின்ற காலத்தில் பிரசவகால மரணங்கள் அதிக அளவில் நடக்கநேரிடும்  என்றும்  உலகம் முழுவதிலும்70 லட்சத்திற்கு மேற்பட்ட திட்டமிடப்படாத கர்ப்பங்கள்  உருவாகும்  வாய்ப்புள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.
  •  தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மருந்தகங்களில்  கூட  தன்னுடைய கர்ப்பத்தை உறுதிப்படுத்தும் சோதனைக்கருவிகள்  அதிக அளவில் விற்பனை  செய்யப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இக்கால கட்டத்தில்  கருத்தடை சாதனங்கனை பெண்களும் ஆண்களும் வெளியில் சென்று வாங்க முடியாத நிலை உள்ளது. இதனால் உருவாகும்திட்டமிடப்படாத, தேவையற்ற கர்ப்பங் களால் பெண்கள் கடுமையான மன உலைச்சலுக்கும், போதுமான உணவு கிடைக்காத இக்கால கட்டத்தில் உடல்நல பாதிப்புக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள். ஊட்டச்சத்து மையங்கள் மூடப்பட்டிருக்கும் நிலையில் கர்ப்பிணிப் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஊட்டச்சத்து மாத்திரைகள், ஊட்டச்சத்து உணவுகளும் கிடைப்பதில்லை. 
  •  உள்ளாட்சிகள் மூலமாக பெண்களுக்கு கொடுக்கப்பட்ட நாப்கின்களை அரசு கடந்த 6 மாத  காலமாக வழங்க வில்லை. உணவுக்காகவும் அடிப்படைத்தேவை களுக்காகவும் பெரும் சிரமத்தை சந்திக்கும் பெண்களால் எப்படி மாதமாதம் நாப்கின்கள் வாங்க முடியும். 
  • தமிழகத்தில் தேசிய ஊரக வேலை உறுதிச்சட்டத்தின் கீழ் 100  சதவீத வேலை துவங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. நூறுநாள் வேலையை உடனடியாக  அனைத்துப் பஞ்சாயத்துகளிலும் துவங்கிடவும், இந்த வேலைத்திட்டத்தை நகர்ப்புறங்களுக்கும் விரிவுபடுத்தி நகர்ப்புற ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவேண்டும்.
  •  நூறு நாள் வேலை செய்து சம்பள பாக்கிகள் வழங்கப்படாத  தொழிலாளிகளுக்கு உடனடியாக சம்பள பாக்கிகளை வழங்கிட வேண்டும்.
  •  பெண்கள் வீடுகளிலிருந்து சிறு தொழில் செய்து வருமானம் ஈட்டுவதற்கான ஏற்பாடுகளையும்  குறிப்பாக தையல் தெரிந்தபெண்களுக்கு வீட்டிலிருந்தே முகக்கவ சங்கள் தைத்துத்தருவது உள்ளிட்ட  வேலை வாய்ப்புகளை தமிழக அரசு செய்து தர வேண்டும். 
  •  பெண்கள் பல்வேறு நுண் நிதி நிறுவனங்களிடம் கடன்களை பெற்று  இத்தகைய குடும்பச்செலவுகளை சந்தித்துக்  கொண்டிருக்கின்ற னர். நுண்நிதி நிறுவனங்கள் அநியாய வட்டியை வசூலித்து  ஏழைப்பெண்களின் உழைப்பை கடுமையாக எதிர்காலத்தில் சுரண்டும் என்பதில் ஐயமில்லை.
  •  இதுபோன்ற பொருளாதார பிரச்சனையை குடும்பங்கள் எதிர் கொள்வதற்காக கேரள அரசு ரூ.2000 கோடி சுயஉதவிக்குழுக்களுக்கு வட்டி இல்லா கடன் தர நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
  •  எனவே  தமிழக அரசு பெண்கள் மீதானஇத்தகைய வன்முறைகளுக்கு உடனடியாகமுடிவு கட்ட வேண்டும்.  கடனைக்  கொடுப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்து அவர்களை கடன் வலையிலிருந்து பாதுகாத்திட வேண்டும். ஊட்டச்சத்து மையங்களில் குழந்தைகள், கர்ப்பிணிப்பெண்களுக்கு  கொடுக்கும் இணைஉணவு வழங்குவதற்கான ஏற்பாட்டை செய்ய வேண்டும்.  
  •  அரசு ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும்அரசு மருத்துவமனைகளில் கருத்தடை மாத்திரைகளும், கருத்தடை சாதனங்களும் தடையின்றி கிடைத்திட தமிழக சுகாதாரத்துறை  ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
;