world

img

இந்தியாவிடம் இருந்து 2 கோடி தடுப்பூசிகள் வாங்க பிரேசில் ஒப்பந்தம்

இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து 2 கோடி கொரோனா தடுப்பூசி மருந்துகள் வாங்க பிரேசில் ஒப்பந்தம் செய்துள்ளது.

உலக அளவில் கொரோனா பாதிப்பில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த 5 வாரங்களாக பிரேசிலில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 1000 பேர் கொரோனாவால் பலியாகின்றனர். இந்நிலையில் மொத்த உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,49,957 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 3,59,560 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசி மருந்துகள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றனர்.இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து 2 கோடி தடுப்பூசி மருந்துகள் வாங்க பிரேசில் ஒப்பந்தம் செய்துள்ளது.

மார்ச் மாதத்தில் முதல் 80 லட்சம் மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மே மாதத்திற்குள் மொத்த மருந்துகளும் ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்று பிரேசில் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 

;