world

img

85 நாடுகளில் டெல்டா வைரஸ்..  உலக சுகாதார அமைப்பு தகவல்...

ஜெனீவா:
கொரோனா டெல்டா வைரஸ் 85 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தொற்று நோய்த் தடுப்பு மையம் தரப்பில் கூறுகையில், “டெல்டா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. சுமார் 85 நாடுகளில் டெல்டா கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா போன்ற உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்களை தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம். இதில் டெல்டா வைரஸ் அதிக தொற்றுத் தன்மை கொண்டதாக உள்ளது. டெல்டா வைரஸ் பரவுதலில் இதே நிலை தொடர்ந்தால் உலகம்முழுவதும் டெல்டா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும், டெல்டா வைரஸால் தீவிரமாக பாதிக்கப்படுபவர்கள் அதிக அளவில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

;