world

img

தீக்கதிர் உலக செய்திகள்

‘சிரியாவிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஈரான் செய்யும்’ 

தங்களால் வெற்றி பெற முடியும் என்ற தவறான கணக்கீட்டுடன் பயங்கரவாதக் குழுக்கள்  தாக்குதல் நடத்த துவங்கியுள்ளன என ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ்  அராச்சி தெரிவித்துள்ளார். துருக்கி தலைநகருக்கு சென்ற போது அங்கு  நடந்த செய்தியாளர் சந்திப் பில் சிரிய ராணுவமும், அரசும் பயங்கரவாத குழுக்க ளைத் தோற்கடிக்கும் திறனைக் கொண்டுள்ளது எனி னும் சிரியாவிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஈரான்  கொடுக்கும் என அராச்சி உறுதி கொடுத்துள்ளார்.  

சீனாவிற்கு  அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார் நேபாள பிரதமர்

நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி நான்கு நாள் அரசுமுறை பயண மாக  சீனாவிற்கு சென்றுள்ளார். இந்த சந்திப்பில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். சீனப் பிரதமர் லே கியாங்கின் அழைப்பின் பேரில் சர்மா ஒலி செல்லும் இந்த நான்கு நாள் பயணத்தில் பொருளாதார, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி சார்ந்த துறைகளில் இருநாடுகளும் இணைந்து செயல்படுவது குறித்து சீன அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.