மகாத்மா இல்லத்தை பார்வையிட்ட சீனத் தூதர்
இந்தியாவுக்கான சீனத் தூதர் சு ஃபெய் ஹாங் செப்டம்பர் 5ஆம் நாள் அகமதாபாத்தில் உள்ள காந்தி இல்லத்தையும் சபர்மதி ஆற்றங்கரை திட்டப்பணியையும் பார்வையிட்டார்.
பின்னர் அவர் கூறு கையில், பத்து ஆண்டுக ளுக்கு முன், சீன அரசுத் தலைவர் ஜிஜின்பிங் குஜராத் மாநிலத்தில் தனது முதலாவது இந்திய பிரதமர் பய ணத்தை தொடங்கி, இந்திய பிரதமர் நரேந் திர மோடியுடன், காந்தியின் இல்லத்தையும் சபர்மதி ஆற்றங்கரை திட்டப்பணியையும் பார்வையிட்டார். இரு நாட்டு தலைவர்களும் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்தி, பரந்த அளவில் ஒத்த கருத்துகளை எட்டினர் என்று தெரிவித்தார்.
மேலும், பத்து ஆண்டுகளுக்குப் பின், சீன-இந்திய உறவை மேம்படுத்தும் முக்கியமான தருணத்தில் இருக்கின்றோம். இரு நாட்டின் பல்வேறு துறையினர்கள், கூட்டு முயற்சியுடன், இரு நாட்டு உறவின் சீரான மற்றும் நிலையான வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்று சு ஃபெய்ஹாங் விருப்பம் தெரிவித்தார்.
உக்ரைனுக்கு 650 வான் தாக்குதல் எதிர்ப்பு: ஏவுகணைகளை வழங்கும் பிரிட்டன்
உக்ரைனுக்கு 16கோடியே 20லட்சம் பவுண்ட் மதிப்புள்ள 650 வான் தாக்குதல் எதிர்ப்பு ஏவுகணை களைப் பிரிட்டன் வழங்கவுள்ளதாக அந்நாட்டின் தேசியப் பாதுகாப்பு அமைச்சகம் செப்.6ஆம் நாள் வெளியிட்ட அறிக் கையில் தெரிவித்துள்ளது. பிரிட்டன் தேசிய பாதுகாப்பு அமைச்சர் ஜான் ஹீலி, வெள்ளியன்று நடைபெற்ற உக்ரைன் பாதுகாப்பு விவகாரத்துக்கான சர்வதேச தொடர்புக் குழுக் கூட்டத்தில் இம்முடிவை அறிவித்தார்.