குவைத், ஜூன் 13- குவைத் நாட்டின் தெற்கு அகமதி மாகாணம், மங்காப் நகரத்தில் அமைந் துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் புதன்கிழமை (ஜூன் 12) அதிகாலை ஏற் பட்ட பயங்கர தீ விபத்தில் 49 பேர் உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்தனர்.
இவர்களில் 42 இந்தியர்கள் என்பதை குவைத் அரசாங்கம் உறுதிப் படுத்தியுள்ள நிலையில், 24 பேர் மலை யாளிகள் என்று கேரள அரசும், 5 பேர் தமிழர்கள் என்று தமிழக அரசும் உறுதி செய்துள்ளன.
250 பேர் வசிக்கும் தொழிலாளர் முகாமில், இந்த விபத்து நடந்துள்ளது. விபத்து நடந்தபோது கட்டடத்தில் 190 பேர் இருந்துள்ளனர். எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களால் ஏற்பட்ட கரும் புகை காரணமாக குடியிருப்பை விட்டு பொது மக்கள் வெளியே வரமுடியாமல் போனது, அடுக்குமாடியின் மேல் பரப்புக்கு செல்ல முயன்ற போது, அங்கிருந்த கதவுகள் மூடப்பட்டு இருந்ததால் அங்கேயும் செல்ல முடி யாத நிலை ஆகிய காரணங்களால் பலர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக குவைத் போலீசார் தெரிவித்துள்ளனர்.
கட்டட உரிமையாளர் கைது
இந்த தீ விபத்து சம்பவத்தைத் தொடர்ந்து, அடுக்குமாடி குடியிருப் பின் உரிமையாளர் மற்றும் கட்டடத்தில் பணியாற்றி வந்த எகிப்தை சேர்ந்த காவ லாளி ஆகியோரை கைது செய்து மறு உத்தரவு வரும் வரை சிறையில் அடை க்குமாறு குவைத் துணைப் பிரதமர் ஷேக் பஹத் அல் யூசப் அல் சபா உத்தர விட்டுள்ளார்.
மேலும், “குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்து பேரிழப்பு” என்றும் இந்த தீ விபத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள குடியிருப்புகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்ட டங்களை ஆய்வு செய்ய குழு நிய மிக்கப்பட்டுள்ளதாகவும், முறையற்ற வகையில் கட்டப்பட்டுள்ள கட்டடங் களை உடனடியாக அகற்றப்படும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், குவைத்திற்கு வேலைக்காக சென்ற 42 தொழிலாளர் கள் பலியான துயரம் இந்தியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொழிலாளர்களின் குடும்பங்கள் பெரும் அச்சமும், பதற்றமும் அடைந்துள்ளனர்
.ஒன்றிய அரசு நிவாரணம்
குவைத் குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர் களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோச னை நடத்தினார்.
அதைத்தொடர்ந்து, தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு 2 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப் படும் என்று அறிவித்தார். மேலும், தொழி லாளர்களின் நிலை குறித்து அறிய, குவைத்தில் உள்ள இந்திய தூத ரகம் 965-65505246 என்ற தொலைபேசி எண்ணை வெளியிட்டது.
கேரள அரசு ரூ. 5 லட்சம் நிவாரணம்
இதனிடையே, கேரள அமைச்ச ரவை சிறப்புக் கூட்டத்தைக் கூட்டிய முதல்வர் பினராயி விஜயன், குவைத் தீ விபத்தில் உயிரிழந்த கேரளத் தொழி லாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம், காயமடைந்த மலையாளி களுக்கு தலா ரூ. 1 லட்சம் வழங்க முடிவு செய்ததுடன், சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உடனடியாக குவைத்திற்குச் செல்வார் என்றும் சுகா தாரத்துறை அமைச்சருடன் சுகாதாரப் பணி இயக்குநர் (NHM) ஜீவன் பாபு உடன் இருப்பார் என்றும் அறிவித்தது.
காயம் அடைந்த தொழிலாளர் களுக்கு சிகிச்சை அளிப்பது, இறந்த வர்களின் உடல்களை சொந்த ஊர் களுக்கு கொண்டு செல்வது போன்ற பணிகளை அமைச்சர் தலைமையிலான குழு ஒருங்கிணைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
பிரபல தொழிலதிபர் யூசுப் அலி மற்றும் பிரபல அயலக தொழிலதிபர் ரவி பிள்ளை ஆகியோர் முதலமைச்சர் பினராயி விஜயனைத் தொடர்பு கொண்டு இறந்தவர்களின் குடும்பங் களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிதி உதவி வழங்குவதாக தெரிவித்தனர். ‘நோர்க்கா’ மூலம் வழங்கப்படும் இந்த உதவிகளுடன் ஒரு குடும்பத்துக்கு தலா ரூ. 12 லட்சம் வரையிலான நிவாரணம் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அயலக மலையாளிகள் நலத் துறையான நோர்க்கா அளித்துள்ள தகவலின்படி, கேரளத்தைச் சேர்ந்த 24 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரியவந்துள்ள நிலையில், பாதிக்கப் பட்டவர்களுக்கு அனைத்து உதவி களையும் வழங்க நோர்க்கா மற்றும் அய லக மலையாளிகள் மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, உதவி மையம் மற்றும் உலகளாவிய தொடர்பு மையம் 24 மணி நேரமும் திறந்திருக்கும்; குவைத்தில் ஒன்றிய அரசின் தலையீடுகளுக்கு மாநில அரசு முழு ஆதரவு அளிக்கும்; தில்லி யில் உள்ள கேரள அரசின் பிரதிநிதி பேராசிரியர் கே.வி. தாமஸ், வெளி யுறவு அமைச்சகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பார் என்று தெரி விக்கப்பட்டு உள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
இதேபோல குவைத் தீ விபத்தில், உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் குறித்து, ஒன்றிய அர சின் தூதரகம் தரப்பில் எந்த அதி காரப்பூர்வ தகவலும் வழங்கப்பட வில்லை என்றும் அங்குள்ள தமிழ்ச் சங்கங்கள் மூலம் விசாரித்ததில் 5 பேர் உயிரிழந்து இருப்பது தெரியவந்து இருப்பதாகவும் தமிழ்நாடு அயலக தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்கள் தஞ்சாவூர், இராமநாதபுரம் மற்றும் பேராவூரணி பகுதிகளைச் சேர்ந்த ராம கருப்பன், வீராசாமி மாரியப்பன், சின்னதுரை கிருஷ்ணமூர்த்தி, முகமது ஷெரீப் மற்றும் ரிச்சர்ட் என அடையாளம் காணப் பட்டு இருப்பதாவும் கூறியுள்ளார்.
முன்னதாக, அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் தமிழக அயலக நலத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்தனர். அப்போது, தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினருக்கு உடல்களை மீட்டுத் தரவும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
குவைத் தொடர்பான விவரங் களுக்கு அயலகத் தமிழர் நலத்துறை யின் கீழ்க்காணும் எண்களை - இந்தியாவிற்கு: +91 1800 309 3793 வெளிநாடு: +91 80 6900 9900, +91 80 6900 9901 தொடர்பு கொள்ளவும் அறி விப்பு செய்யப்பட்டுள்ளது.
குவைத் சென்றார் வெளியுறவு இணையமைச்சர்
தீ விபத்தில் காயமடைந்த இந்தி யர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் உதவி களை மேற்பார்வையிடவும், உயிரிழந்த வர்களின் உடல்களை விரைவாக இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவதை உறுதி செய்யவும் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் கிர்த்தி வர்தன் சிங் அவசரமாக குவைத் சென்றுள்ளார்.
அதேபோல உயிரிழந்த இந்தியர் களின் உடல்களைக் கொண்டுவர இந்திய விமானப் படை விமானம் தயார் நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.