world

img

வங்க தேசத்தில் மதவெறி அராஜகத்தை அனுமதியோம் - பிரதமர் ஷேக் ஹசீனா உறுதி

வங்க தேசத்தில் மதவெறி அராஜகத்தை அனுமதியோம் என்றும் மதத்தின் பெயரால் மக்கள் மத்தியில் பிளவினை ஏற்படுத்துவதை சகித்துக்கொள்ள மாட்டோம் என்றும் வங்க தேசப் பிரதமர் ஷேக் ஹசீனா கூறினார்.

வங்க தேசத்தில் நடைபெற்ற விடுதலைப் போர் வெற்றியின் 49ஆவது ஆண்டு செவ்வாய்க்கிழமையன்று கொண்டாடப்பட்டது. இது உலகில் உள்ள வங்க தேசத்தின் தூதரகங்களில் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

தாக்காவில் நடைபெற்ற விழாவில் ஷேக் ஹசீனா, போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலைப் போராட்ட வீரர்களை வாழ்த்தினார். பின்னர் அவர் பேசியபோது, அரசியலில் வகுப்புவாதம் தலைதூக்குவதை அனுமதிக்க மாட்டோம் என்றார்.

“வங்க தேசம், லாலான் ஷா, ரவீந்திரநாத் தாகூர், காசி நஷ்ருல், ஜிபனானந்தா ஆகியோர் உருவான பூமி. இந்த பூமியில்தான் ஷாஜலால், ஷா போரான், ஷா மோக்டம், காஞ்சஹான் அலி முதலியோர் உருவாகி இருக்கிறார்கள். ஹேக் முஜிப் அவர்களின் இந்த வங்க தேசத்தில் 16.5 கோடி வங்காளிகள் வசிக்கிறார்கள். இந்த தேசம் அனைவருக்குமானதாகும். மக்கள் மத்தியில் மதத்தின் பெயரால் எவ்விதமான பிளவையும் உருவாக்க எவரையும் அனுமதிக்க மாட்டோம்.”இவ்வாறு ஷேக் ஹசீனா கூறினார்.

(ந.நி.)