பாகிஸ்தானில் தீவிரமான காற்று மாசுபாடு
காற்று மாசுபாடு காரணமாக பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் 18 லட்சம் மக்கள் நோய்வாய்ப்பட்டுள்ளனர் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காற்று மாசுபாடில் இருந்து குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்காக மாகாணம் முழுவதும் ஐந்து நாட்களுக்கு பள்ளிகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. காற்று மாசு காரணமாக சமீப வாரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றதையும் அந்நாட்டு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
டிசம்பர் 16 ஜெர்மனியில் நம்பிக்கை வாக்கெடுப்பு
ஜெர்மன் அதிபர் ஒலாஃப் சோல்ஸ் டிசம்பர் 16 அன்று தனது அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை என்றால் 2025 பிப்ரவரி மாதம் ஜெர்மன் நாடாளுமன்றம் தேர்தலை நோக்கி செல்லும் என்று ஜெர்மன் அரசியல் தலை வர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஜெர்மன் நிதி அமைச்சர் கிறிஸ்டியன் லிண்ட்னரை பதவி நீக்கம் செய்து அந்நாட்டு அதிபர் உத்தரவிட்டதை தொடர்ந்து ஆளும் கூட்டணி உடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
‘தீவிர விளைவுகளை உருவாக்கும் குரங்கம்மை’
காங்கோவில் குரங்கம்மை கண்டறியப்பட்ட பின் அதனுடைய தொற்றின் வேகம் அதி கரித்துள்ளது என உலக சுகாதார அமைப்பு எச்ச ரித்துள்ளது. காங்கோவின் அனைத்து பகுதிக ளிலும் தொற்று பரவியதுடன் புருண்டி, உகாண்டா ஆகிய நாடுகளிலும் தொற்று பரவி வருகிறது என வும் தெரிவித்துள்ளனர். தொற்றைக் கட்டுப்படுத்த போதிய சுகாதார நடவடிக்கைகளை வரும் நாட்க ளில் அதிகரிக்க வேண்டும். இல்லை என்றால் இந்த தாக்கம் மிக தீவிரமான விளைவுகளை உண்டாக் கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
85 சதவீத மனிதாபிமான உதவிகளை முடக்கிய இஸ்ரேல்
வடக்கு காசா பகுதியில் கிட்டத்தட்ட 85 சதவீதத்திற்கும் அதிகமான ஐ.நா. நிவாரண உதவிப்பொருட்களை இஸ்ரேல் ராணுவம் முடக்கியுள்ளது. கடந்த சில மாதங்களாக வடக்கு காசாவில் இஸ்ரேல், நிவாரண உதவிகளை முடக்கி வரும் பின்ன ணியில் மிக கொடூரமான பட்டினியால் பாலஸ்தீன மக்கள் கொத்துக்கொத்தாக சாகும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது என ஐ.நா. நிவாரண அமைப்பு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் அமைச்சருக்கு அரபு அமீரகம் கண்டனம்
மேற்குக் கரையை இஸ்ரேலுடன் இணை க்க வேண்டும் என்று பேசிய இஸ்ரேல் நிதி அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச்க்கு அரபு அமீரகம் கடுமையான கண்டனத்தை தெரி வித்துள்ளது. அமீரகத்தின் வெளியுறவுத்துறை அறிக்கையில் இஸ்ரேல் ஏற்கனவே ஆக்கிர மித்து வைத்துள்ள பாலஸ்தீனத்தின் சட்டப்பூர்வ நிலையை மாற்றும் நோக்கத்துடன் இஸ்ரேல் அமைச்சர் பேசியது ஆத்திரமூட்டும் செயல் எனவும் அவற்றை தாங்கள் நிராகரிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.