டெல்அவிவ்,நவ.11- லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து நடத்தப் பட்ட பேஜர், வாக்கி - டாக்கி தாக்கு தலை இஸ்ரேல் தான் நடத்தியது என அதிகாரப்பூர்வமாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு உறுதிப்படுத்தியுள்ளார். செப்டம்பர் மாதம் 17 அன்று லெப னானில் 3000 க்கும் மேற்பட்ட பேஜர், வாக்கி - டாக்கி வெடித்தது. இந்த தாக்குதல் உலகத்தையே அதிர்ச்சிக் குள்ளாக்கியது. இந்த தாக்குதலில் 40 பேர் படுகொலையானதுடன் நூற்றுக் கணக்கான மக்கள் படுகாயம டைந்தனர். இதில் ஹிஸ்புல்லா அமைப்பினரை விட பொது மக்களே அதிகமாக பாதிக்கப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு லெபனான் இஸ்ரேல் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்தது. ஆனால் இஸ்ரேல் எந்த பதிலும் சொல்லாமல் இருந்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை யன்று நடைபெற்ற இஸ்ரேல் அமைச்ச ரவை கூட்டத்தில் லெபனானில் நடத்தப்பட்ட பேஜர் தாக்குதல் தனது ஒப்புதலுடனேயே நடந்ததாகவும், ஹசன் நஸ்ரல்லா கொலை செய்யப் பட்டதும் தனது ஒப்புதலுடனே நடந்த தாகவும் இஸ்ரேல் பிரதமர் நேதன் யாகு தெரிவித்துள்ளார். இதனை அவரது செய்தித் தொடர்பாளர் ஓமர் தோஸ்த்ரியும் உறுதி செய்துள்ளார். மேலும் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகத்தில் உள்ள சில மூத்த அதிகாரிகள் அந்நாட்டின் அரசியல் பிரமுகர்களின் எதிர்ப்பை மீறி தான் நேதன்யாகு இந்த பேஜர் தாக்குதலை யும், ஹசன் நஸ்ரல்லா மீதான தாக்குத லையும் நடத்த உத்தரவிட்டுள்ளார் என சில சர்வதேச செய்தி நிறுவ னங்கள் குறிப்பிட்டுள்ளன. பேஜர் தாக்குதல் துவங்கி இஸ்ரேலின் வான்வழி, தரைவழித் தாக்குதலின் காரணமாக லெபனா னில் இதுவரை 13 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்ற பிறகு அவருடன் மூன்று முறை தான் பேசி விட்டதாகவும் தெரி வித்துள்ளார்.