பாகிஸ்தானை விட்டு வெளியேறிய 10 லட்சம் இளைஞர்கள்
ஐ.நா. அறிக்கைப்படி, கடந்த மூன்று ஆண்டுகளில் மருத்துவர்கள் மற்றும் பொறியா ளர்கள் உள்ளிட்ட 10 லட்சம் திறன் மிகு இளம் தொழிலாளர்கள் பாகிஸ்தானை விட்டு வெளி யேறியுள்ளனர். இது பெருமளவு வெளியேற்றம் நடைபெறும் பத்து நாடுகளில் பாகிஸ்தா னும் ஒன்று என்பதைக் காட்டுகிறது. 2023-ஆம் ஆண்டில் பாகிஸ்தான் அதிகபட்ச வெளியேற் றத்தைச் சந்தித்துள்ளது. பொருளாதார நிலைத்தன்மையின்மை மக்களை வெளிநாடுகளில் வாய்ப்புகளைத் தேடத் தூண்டுகிறது.
மத்திய காசாவில் 47 பாலஸ்தீனர்கள் பலி
மத்திய காசாவில் இஸ்ரேல் தாக்குதலின் காரணமாக 47 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு, பலர் காயமடைந்துள்ளனர். பெரும்பாலோர் குழந்தைகளும் பெண்களுமாவர். பாலஸ்தீன செய்தி நிறுவனம் வாவா வெளியிட்ட அறிக்கைப்படி, சில குடும்பங்கள் கூடியிருந்த இடத்தில் தாக்குதல் நடைபெற்றது. தொடக்க தாக்குதலுக்குப் பிறகு, உதவிக்கு விரைந்த மக்களையும் உடனிருந்தவர்களையும் இரண்டாவது தாக்குதல் பலி கொண்டது.
ஹசீனா கூட்டணிக் கட்சி அலுவலகம் தீக்கிரை
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கூட்டணிக் கட்சியான ‘ஜாதியா’ கட்சியின் மத்திய அலுவலகம் தீக்கிரையாகி, சிதைக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை தாக்கப்பட்ட அலுவலகம் ஹசீனாவுக்கு எதிரான போராட்டக்காரர்களால் சிதைக்கப்பட்டது. அக்கட்சி அறிவித்த ஒரு பேரணிக்கு எதிர்ப்பு தெரிவித்தே இச்சம்பவம் நடந்துள்ளது.
உக்ரைன் எல்லைக்கு அருகே 8,000 வடகொரிய படைவீரர்கள்?
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கென், “ரஷ்யா 8,000 வடகொரிய வீரர்களை உக்ரைன் எல்லைக்கு அருகேயுள்ள கர்ஸ்க் பகுதியில் நிறுத்தி வைத்துள்ளது. இந்தத் தாக்குதல்கள் அடுத்த சில நாட்களில் நடைபெறும்” என்று தெரிவித்ததாக மேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாலியல் வன்கொடுமையிலிருந்து தப்பிக்க தற்கொலை
சமீபத்திய அறிக்கையின்படி, சூடானில் ஆயுதக் கும்பலின் பாலியல் வன்கொடுமையிலிருந்து தப்பிக்க பெண்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர் எனத் தெரிய வந்துள்ளது. சர்வதேச இடம்பெயர்வோர் அமைப்பு (IOM) தெரிவிக்கையில், போரின் காரணமாக 1.10 கோடி மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.