world

img

தடைகளின் முற்றுகையில் கியூபா - ஆர்.சிங்காரவேலு

கரீபியன் கடலில் மிகப்பெரிய தீவாக விளங்கும் கியூபா,  நீண்ட போராட்ட வரலாற்றைக் கொண்டது. 1959ஆம் ஆண்டு வரை, பாடிஸ்டா என்ற சர்வாதிகாரியின் ஆட்சி யின் கீழ் இருந்தது. பிடல் காஸ்ட்ரோ தலைமையிலான புரட்சிப் படையினர், இந்த ஆட்சியை வீழ்த்தி, சோசலிச ஆட்சியை நிறுவினர். இது கியூபா வின் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்பு முனையாக அமைந்தது. அமெரிக்கப்  பொருளாதாரத் தடைகள் 1958ல் துவங்கிய அமெரிக்கப் பொருளாதாரத் தடைகள், படிப்படியாக விரிவடைந்தன. 1962ல் முழுமையான தடைகளாக மாறின. இத்தடைகளால் ஆண்டுதோறும் சுமார் 500 கோடி டாலர் இழப்பை கியூபா சந்திக்கிறது. கடந்த 60 ஆண்டுகளில் மொத்தம் 16,400 கோடி டாலர் இழப்பு ஏற்பட்டுள் ளது. மருந்துகள், உணவுப் பொருட்கள், தொழில்நுட்பக் கருவிகள் என அனைத்து வகை வர்த்தகமும் கட்டுப்படுத்தப் பட்டுள்ளது. சர்வதேச ஆதரவு உலக நாடுகளின் பெரும்பான்மை யான ஆதரவு கியூபாவுக்கு உள்ளது. 2023ல் நடந்த ஐ.நா. வாக்கெடுப்பில், 187 நாடுகள் கியூபாவுக்கு ஆதரவாக வாக்களித்தன. அமெரிக்காவும் இஸ்ரே லும் மட்டுமே எதிர்த்தன. லத்தீன் அமெ ரிக்க நாடுகள், தென்கிழக்கு ஆசிய நாடு கள், இஸ்லாமிய நாடுகள் உள்ளிட்ட பல அமைப்புகள் கியூபாவுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றன. அமெரிக்க நிர்வாகங்களின் கொள்கைகள் ஒபாமா ஆட்சிக் காலத்தில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டன. ஆனால் டொனால்டு டிரம்ப் காலத்தில் 243 புதிய தடைகள் விதிக்கப்பட்டன. கியூபாவை பயங்கரவாத நாடுகள் பட்டியலில் சேர்த் தார். தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனும் கடுமையான தடைகளையே தொடர்கிறார். கியூபாவுக்குச் செல்லும் ஐரோப்பியப் பயணிகளுக்கு அமெ ரிக்க நுழைவு அனுமதி மறுக்கப்படு கிறது. தற்கால நெருக்கடிகள் கடுமையான மின்வெட்டு, எரி பொருள் தட்டுப்பாடு, அத்தியாவசியப் பொருட்களுக்கான பற்றாக்குறை என பல பிரச்சனைகளை கியூபா எதிர் கொள்கிறது. மின் உற்பத்தி நிலையங்க ளுக்குத் தேவையான உதிரி பாகங்க ளை வாங்க முடியாமல் திணறுகிறது. சர்வதேச வங்கிப் பரிவர்த்தனைகளி லும் தடைகள் உள்ளன. எதிர்கால வாய்ப்புகள் பெரும்பாலான நாடுகளின் ஆதரவு காரணமாக, கியூபாவுக்கான சர்வதேச ஒத்துழைப்பு அதிகரித்து வருகிறது. புதிய வர்த்தகப் பங்காளிகளை உரு வாக்கி வருகிறது. சுற்றுலாத் துறையில் புதிய முன்னேற்றங்கள் ஏற்பட்டு வரு கின்றன. மருத்துவத் துறையில் கியூபா சிறந்து விளங்குகிறது.  இவ்வாறு கடந்த 60 ஆண்டுகளாக அமெரிக்கப் பொருளாதாரத் தடை களை எதிர்கொண்டு, தனது சுயாதீனப் பாதையில் கியூபா தொடர்ந்து பய ணித்து வருகிறது. சர்வதேச சமூகத் தின் ஆதரவும், புதிய கூட்டாண்மைக ளும் கியூபாவின் வளர்ச்சிக்கு உறு துணையாக அமைந்துள்ளன.

இத்தனை தடைகளா? பொருளாதார  தடைகளின் தாக்கம்

o ஆண்டுதோறும் சுமார் 500 கோடி டாலர் இழப்பு
o 60 ஆண்டுகளில் மொத்த இழப்பு - 16,400 கோடி டாலர் (ரூ.14 லட்சம் கோடி)
ஐ.நா வாக்கெடுப்பு (2023)
u கியூபாவுக்கு ஆதரவாக - 187 நாடுகள்
u எதிர்ப்பு - அமெரிக்கா, இஸ்ரேல் மட்டும்
u பங்கேற்காதவை - மால்டோவா
வரலாற்று காலக்கோடு
y1958 - முதல் அமெரிக்க பொரு
ளாதாரத் தடை
y 1959 - பிடல் காஸ்ட்ரோவின் புரட்சி வெற்றி
y 1962 - முழுமையான பொருளாதார தடைகள் அமல்
டிரம்ப் காலத்தில்
K 243 புதிய தடைகள் விதிப்பு
K பயங்கரவாத நாடுகள் பட்டியலில் சேர்ப்பு
1959-ல் வர்த்தக நிலை
l கியூபாவின் ஏற்றுமதியில் 73% அமெரிக்காவுக்கு சென்றது
2023-24 காலகட்டத்தில்
k மார்ச் 23 - பிப்ரவரி 2024: ஒரே ஆண்டில் 500 கோடி டாலர் இழப்பு
k கடுமையான மின்வெட்டு பிரச்சனை
ஆதரவு அமைப்புகள்
u லத்தீன் அமெரிக்க-கரீபியன் நாடுகள் சமூகம்
u தென்கிழக்கு ஆசிய நாடுகள் அசோசியேசன்
u இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு
u அணிசேரா இயக்கம்
u கரீபியன் சமூகம்