ரஷ்ய அதிகாரிகளை சந்திக்கும் அமெரிக்க அதிகாரிகள்
உக்ரைன் – ரஷ்யா போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய அதிகாரிகளுடன் இந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று உக்ரைன் அதிகாரிகளுடன் அமெ ரிக்கா பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலை யில் சில நாட்களிலேயே ரஷ்ய அதிகாரிகளுட னான சந்திப்புக்கான அறிவிப்பும் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும் பேச்சுவார்த்தைக் கான தேதி மற்றும் பங்கேற்கும் நபர்களின் விவ ரங்கள் தெரிவிக்கப்படவில்லை.
சிரியா படுகொலைகளை விசாரிக்கக் குழு அமைப்பு
சிரியாவில் தற்போது இருக்கும் பயங்கர வாதிகள் அரசாங்கத்தின் பாதுகாப்புப் படைக்கும் முன்னாள் ஜனாதிபதி அல் அசாத்து க்கு விசுவாசமான படைக்கும் இடையே கடுமை யான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த சண்டையில் 125 பாதுகாப்புப் படைவீரர்கள், 100 க்கும் மேற்பட்ட அல் அசாத் ஆதரவு வீரர்கள், 700 க்கும் அதிகமான பொதுமக்கள் என 1000 பேர் படுகொலையானார்கள். இது குறித்து விசாரணை நடத்த அந்நாட்டின் இடைக்கால ஜனாதிபதி அஹ்மத் அல்-ஷாரா குழு ஒன்றை அமைத்துள்ளார்.
ஆஸ்திரேலியா மழை வெள்ளம் : 2 லட்சம் வீடுகள் பாதிப்பு
ஆல்ஃபிரட் சூறாவளியால் ஆஸ்திரேலியா வில் ஏற்பட்ட மோசமான மழை காரணமாக பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தின் காரணமாக 2,00,000 க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வணிக நிறுவ னங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு விட்டது. குயின்ஸ்லாந்து மற்றும் நியூ சவுத் வேல்ஸ் கடற்கரையில் 400 கிலோமீட்டர் சுற்றள விற்கு மோசமான வானிலை நிலவும் எனவும் வெள்ள அபாயம் உள்ளது எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஹமாஸ் தலைவர்களுடன் அமெரிக்கா நேரடி பேச்சுவார்த்தை
ஹமாஸ் அமைப்பின் தலைவர்களுடன் அமெரிக்கா நேரடி பேச்சுவார்த்தை நட த்தியுள்ளது. அமெரிக்க தூதர் ஆடம் பேஹ்ளீர் நடத் திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து பணையக்கைதி கள் விடுதலை செய்வது தொடர்பான ஒப்பந்தம் வரும் நாட்களில் கையெழுத்தாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹமாஸ்-இஸ்ரேல் இடையே மோசமாகி வரும் பேச்சுவார்த்தையை சரி செய்ய அமெரிக்கா தலையிட்டதாகக் கூறப்படு கின்றது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் தொடர்ந்து காசாவில் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
வெள்ளத்தில் பலியான மக்கள் மூன்று நாள் துக்கம் அனுசரிப்பு
அர்ஜெண்டினா தலைநகர் அருகிலுள்ள பஹியா பிலன்கா என்ற நகரில் ஒரு வருடத்தில் பெய்யவேண்டிய மழை சில மணி நேரத்தில் பெய்தது. இதனால் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளத்தில் 16 பேர் பலியாகினர். இந்நிலையில் மூன்று நாட்கள் தேசிய துக்க தினமாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்த வெள்ளத்தில் பலர் காணாமல் போயுள்ளனர். அவர்களில் பலர் இன்னும் மீட்கப்படவில்லை. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.
கனடாவின் புதிய பிரதமர் : மார்க் கார்னி
கனடாவின் லிபரல் கட்சியின் தலைவரா கவும், புதிய பிரதமராகவும் மார்க் கார்னி வெற்றி பெற்றுள்ளார். நாடாளுமன்ற, அமைச்சரவை அனுபவமும் இல்லாமல் கனடாவில் ஒருவர் பிரதமராவது இதுவே முதல் முறை. கார்னி இதற்கு முன் கனடா வின் மத்திய வங்கி ஆளுநராகப் பணியாற்றிய வர். இந்த பிரதமர் மற்றும் கட்சி தலைமைக்கான தேர்தலில் முன்னாள் நிதியமைச்சரான கிறிஸ்டி யா ஃப்ரீலாண்டை தோற்கடித்து சுமார் 86 சதவீத வாக்குகளைப் பெற்று வென்றுள்ளார். கனடாவின் பிரதமராக இருந்த ஜன்ஸ்டின் ட்ரூடோ மீது அக்கட்சியில் கடுமையான அதிருப்தி எழுந்தது. இந்நிலையில் அவர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் புதிய பிரதமருக்கான உட்கட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் சுமார் 15.2 லட்சம் கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்ட னர். 2013 முதல் தலைமை பதவியில் நீடித்து வந்தார் ஜஸ்டின் ட்ரூடோ. அமெரிக்காவின் வரிவிதிப்பிற்கு எதிராக கனடாவும் வரி விதிப்பதை ஆதரித்து வரும் கார்னி, கனடாவின் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி வரு கின்றார். அமெரிக்காவின் வரிகளை உறுதியாக எதிர்கொண்டு உரிய தீர்வு கொடுப்பேன் எனவும் வாக்குறுதியை கொடுத்துள்ளார்.
இதற்கான பதிலடி நடவடிக்கைகள் மற்றும் நாட்டில் முத லீட்டை அதிகரிப்பதற்கான திட்டத்தையும் வலி யுறுத்தியுள்ளார்.குறிப்பாக ஜி7 கூட்டமைப்பில் உள்ள நமது கனடா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரண்டு நாட்டின் மத்திய வங்கிகளை நிர்வகித்துள்ள என்னால் அமெரிக்கா விதித்து வருகின்ற வரிகளை எதிர்கொண்டு சமாளிக்க முடியும். அதற்கான அனுபவம் எனக்குள்ளது என அவர் பிரச்சாரம் செய்துள்ளார்.
ஒற்றுமை, ஜனநாயகம், பொருளாதாரப் பின்னடைவு ஆகிய வற்றின் முக்கியத்துவத்தை குறித்து தனது பிரியா விடை உரையில் பேசிய ட்ரூடோ,”எந்த தவறும் செய்யாதீர்கள், இது ஒருதேசத்தை கட்டி எழுப்பக் கூடிய நேரம். ஜனநாயகம் கொடுக்கப்படவில்லை.
சுதந்திரம் கொடுக்கப்படவில்லை. ஏன் கனடா கூட யாரோ கொடுத்ததல்ல” என்று பேசினார். என்னைத் தவறாக நினைத்துக்கொள்ளா தீர்கள். கடந்த 10 ஆண்டுகளில் என்ன செய்தோம் என்பதில் நான் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கி றேன். நமது நாடு பொருளாதார சவால்களை எதிர்கொண்டு வருகின்றது. இந்த நேரத்தில் கனடா குடிமக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் என ட்ரூடோ அழைப்பு விடுத்தார்.