பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் கடந்த 9 மாத காலமாக உள்ள விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் வரும் மார்ச் 16-இல் பூமிக்கு திரும்ப உள்ளனர். ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5 அன்று சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு 10 நாள் பயணமாக சென்றனர். விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதன் காரணமாக இருவரும் சர்வதேச விண்வெளி மையத்திலேயே தங்கவேண்டிய சூழல் ஏற்பட்டது.
எக்ஸ் தள முடக்கம் : உக்ரைனை சந்தேகிக்கும் மஸ்க்
மார்ச் 10 அன்று எக்ஸ் சமூகவலைதளம் மூன்று முறை முடங்கியது. இந்த முடக்கத்தின் பின்னணியில் உக்ரைன் நாட்டின் சதி இருக்கலாம் என எலான் மஸ்க் சந்தேகம் எழுப்பியுள்ளார். மேலும் எக்ஸ் தளத்தின் மீது தினந்தோறும் சைபர் தாக்குதல் நடைபெறும். ஆனால் இது மிகப்பெரிய சைபர் தாக்குதல் நடந்துள்ளது. தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட கணினியின் ஐபி முகவரி உக்ரைன் நாட்டில் இருந்தே அது நிகழ்த்தப்பட்டுள்ளதாகக் காட்டுகிறது என்று தெரிவித்துள்ளார்.
ரஷ்யா மீது உக்ரைன் மிகப்பெரும் டிரோன் தாக்குதல்
ரஷ்யா மீது தாக்குதல் நடத்த உக்ரைன் ஏவிய 337 டிரோன்களை ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்புகள் சுட்டு வீழ்த்தியதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.தலைநகர் மாஸ்கோ பகுதியில் 91, குர்ஸ்க் பகுதியில் 126, பிரையன்ஸ்க் பகுதியில் 38, பெல்கொரோட் பகுதியில் 25 டிரோன்கள் ஏவப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 2025 இல் ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் நடத்திய மிகப்பெரிய டிரோன் தாக்குதல் இது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியா ராணுவக்கட்டமைப்புகள் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்
தெற்கு சிரியாவில் உள்ள ராணுவ தலைமையகம், ஆயுதக் கிடங்குகள் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழித்தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் “ரேடார்கள் மற்றும் வான்வழி உளவு அமைப்புகளை குறிவைத்து நடத்தப்பட்டுள்ளது என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் பலியானவர்கள் எண்ணிக்கை குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. சிரியாவின் ரானுவக்கட்டமைப்புகள் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
கொலம்பியாவில் நிலச்சரிவு: நான்கு பேர் பலி
கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் நான்கு பேர் பலியாகியுள்ளனர். மேலும் 100 குடும்பங்கள் வீடுகளை இழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மிக கனமழை காரணமாக அந்நாட்டின் பல நகரங்களில் அவசரநிலை உருவாகியுள்ளது. 24 நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மீட்புப் பணிகளை துரித்தப்படுத்த பேரிடர் மீட்புப்படை களமிறக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானில் பயணிகள் ரயிலை கடத்திய பிரிவினைவாதிகள்
பாகிஸ்தானின் தென்மேற்கு பலூசிஸ் தான் மாகாணத்தில் உள்ள குவெட் டாவிலிருந்து கைபர் பக்துன்வாவில் உள்ள பெஷாவருக்கு பயணித்துக் கொண்டிருந்த ஜாஃபர் எக்ஸ்பிரசை பலூசிஸ்தான் பிரிவினைவாத படை கடத்தியுள்ளது. ஒன்பது பெட்டிகளில் 400-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் பயணித்து கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
ரயில் தண்டவாளத்தில் வெடிகுண்டுவைத்து வெடிக்க செய்து கட்டாயமான முறையில் ரயிலை நிறுத்தியுள்ளனர். பின் ரயிலை கட்டுப்பட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர். இந்த கடத்தலின் போது ஆறு பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப் பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து பலூசிஸ் தான் பிரிவினைவாத அமைப்பின் செய்தித் தொ டர்பாளர் ஜீயந்த் பலோச் வெளியிட்ட அறிக்கையில், பாகிஸ்தான் ராணுவம் ஆயுத நடவடிக்கையை மேற்கொண்டால் பணையகைதிகள் அனைவரை யும் படுகொலை செய்வோம் எனவும் மிரட்டியுள்ளனர்.
எந்தவொரு வகையில் ராணுவத்தாக்குதல் நடத்த நினைத்தாலும் அதற்கு இணையான பதிலடி கொடுக்கப்படும். இதுவரை, ஆறு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் நூற்றுக்கணக்கான பயணிகள் எங்கள் காவலில் தான் உள்ளனர். பலூ சிஸ்தான் விடுதலை ராணுவம் இந்த நடவடிக்கைக்கு முழுப் பொறுப்பையும் ஏற்கிறது என்று அந்த அறிக் கையில் தெரிவித்துள்ளார்.
பலூசிஸ்தான் பகுதியில் தற்போது பதற்றமான சூழல் நிலவி வருகின்றது. பாகிஸ்தானில் உள்ள பலு சிஸ்தான் பகுதியை பிரிக்க வேண்டும் என ஒரு பலூ சிஸ்தான் பிரிவினைவாத ராணுவக்குழு பல ஆண்டு களாக பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது. பாகிஸ்தானின் கனிம வளங்களில் பங்கையும் இவ்வமைப்பு கேட்டு வருகின்றது.
பலூசிஸ்தானில் உள்ள எரிவாயு மற்றும் கனிம வளங்களை நியாயமற்ற முறையில் பாகிஸ்தான் அரசு சுரண்டுவதாகக் கூறி, பல ஆண்டுகளாக பாகிஸ் தான் அரசாங்கத்துடன் போரிட்டு வருகின்றது. இந்த பலூசிஸ்தான் பிரிவினைவாத குழுக்களில் பயங்கர வாத நடவடிக்கை கைபர் பக்துன்வா பகுதியில் மிக அதிகமாக உள்ளது.
பலூசிஸ்தான் புவியியல் ரீதியாக பாகிஸ்தான் அரசுக்கு முக்கியப் பகுதியாகும். குறைந்த மக்கள் தொகையுடன் பரப்பளவில் மிகப்பெரிய மாகாண மாக உள்ள பலூசிஸ்தான் பாகிஸ்தானின் மொத்த நிலப்பரப்பில் கிட்டத்தட்ட 44 சதவீதத்தை கொண்டுள் ளது. இம்மாகாணத்தில் உள்ள குவாதர் துறைமுகம் உலகின் மிகப்பெரிய ஆழ்கடல் துறைமுகங்களில் ஒன்றாக உள்ளது. இது பிராந்திய மற்றும் உலகளா விய வர்த்தக பாதைகளுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். தற்போது நிலைமையைச் சமாளிக்க பல்வேறு பிரிவுகளில் இருந்து பாதுகாப்பு படையினரை ராணுவம் களமிறக்கியுள்ளதாக பாகிஸ்தான் அரசு செய்தித் தொடர்பாளர் ஷாஹித் ரிண்ட் தெரிவித்துள்ளார்.