world

img

700 பேரை படுகொலை செய்த அமெரிக்கப் போலீஸ்

வாஷிங்டன், ஆக. 5- கடந்த ஏழு மாதங்களில் மட்டும் அமெரி க்கக் காவல்துறையினரின் வன்முறைக்கு 700க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மேப்பிங் போலீஸ் வயலென்ஸ் என்ற  அமைப்பின் புள்ளிவிபரங்கள் பல்வேறு  அதிர்ச்சித் தகவல்களைத் தருகின்றன. இந்த அமைப்பின் கணிப்பின்படி, மேலும் 440 பேர் நடப்பாண்டில் காவல்துறையினரின் வன்முறைக்குப் பலியாவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. காவல்துறையால் கொல்லப்பட்டவர்களில், மூன்றில் ஒருவர் தான் வன்முறை சார்ந்த குற்றச்சாட்டு க்கு ஆளாகியிருந்தார். வன்முறை சாராத குற்றங்கள்தான் மற்ற இருவர் மீது சாட்டப் பட்டிருந்தன. கொலை செய்யப்பட்ட வர்களில் பெரும்பாலானவர்கள், காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள் ளனர். 

காவல்துறையால் கொல்லப்பட்டவர்க ளில் கிட்டத்தட்ட அனைவரும், பாதுகாப்பி லிருந்து தப்பி ஓட முயற்சித்ததால் கொலை  செய்யப்பட்டதாக பதிவு செய்யப் பட்டிருக்கிறது. 2013 ஆம் ஆண்டில் இருந்து சேகரிக்கப்பட்டுள்ள புள்ளிவிபரங்களின்படி ஆப்பிரிக்க வம்சாவளியினரின் எண்ணிக்கை மற்றவர்களைவிட மூன்று மடங்கு அதிகமாக இருக்கிறது. ஒட்டு மொத்தமாகவே, 2021 ஆம் ஆண்டின் முதல்  ஏழு மாதங்களைவிட நடப்பாண்டில் அதிக மானோர் காவல்துறையின் வன்முறைக்குப் பலியாகியுள்ளனர். 2022 ஆம் ஆண்டில் வெறும் எட்டு நாட்கள் மட்டுமே காவல்துறை யின் வன்முறைக்கு யாரும் பலியாகாமல் இருந்திருக்கிறார்கள். 

பிரபல நாளிதழான வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ள புள்ளிவிபரப்படி, ஜூலை 16 ஆம் தேதி வரையில் காவல்துறை யின் வன்முறைக்கு 614 பேர் பலியாகி யிருக்கிறார்கள். இரண்டு புள்ளி விபரங்களின்படி, நடப்பாண்டில் ஒவ்வொரு  நாளும் குறைந்தது மூன்று பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஒபாமா, டிரம்ப், தற்போது ஜோ பைடன் என்று ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதியோ அல்லது குடியரசுக்கட்சியின் ஜனாதிபதியோ, யார்  பதவியில் இருந்தாலும் இந்தக் கொலைகள் நடந்து கொண்டே இருக்கின்றன. காவல்துறையினரின் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கின்றன. நியூயார்க் நகரத்தில் நடந்த ஒரு சம்பவத்தில், 18 வயதுள்ள ரேமண்ட் சாலுய்சாண்ட் என்ற இளைஞரை டியோன் மிடில்டன்  என்ற காவல்துறை அதிகாரி சுட்டுக் கொன்றிருக்கிறார். நள்ளிரவில் நடந்த இந்த சம்பவத்தில், தன் மீது அந்த இளைஞர் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் துப்பாக்கியால் தாக்கியதாக அதிகாரி சொல்லியிருக்கிறார். இத்தனைக்கும் அந்த இளைஞர் வைத்திருந்த தண்ணீர்த் துப்பாக்கி, விளையாடுவதற்காக பயன்படுத்தப்படுவதாகும். இதுபோன்ற பல சம்பவங்கள் அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நிகழ்ந்துள்ளன.

;