world

img

கார்பன் வெளியேற்றம்: கண்காணிக்க பணித்திட்டம்

பெய்ஜிங், அக்.8- கார்பன் வெளியேற்ற உச்சிநிலை மற்றும் சமநிலை தொடர்பான பணிகளை முன்னெடுக்கும் விதமாக, பல்வேறு மத்தியத் தொழில் நிறுவனங்கள், தத்தம் செயற்பாட்டுத் திட்டத்தை வகுத்து, தொழில் கட்டமைப்பு மாற்றத்தை முன்னேற்றம் செய்ய பாடுபட வேண்டும் என்று சீன அமைச்சரவையின் அரசுச் சொத்துக்கள் கண்காணிப்பு மற்றும் நிர்வாக ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த ஆணையம், ஆகஸ்ட் மாதம், மத்திய தொழில் நிறுவனங்களின் எரியாற்றல் சிக்கனம், உயிரினச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கண்காணிப்பு மற்றும் நிர்வாக நெறிகளின் மீதான மேற்பார்வை விதிகளை வெளியிட்டது. அதன்படி, இந்நிறுவனங்கள் கார்பன் வெளியேற்றத்தின் கணக்கீட்டு முறையையும், தகவல்களை வெளியிடும் முறைமையையும் மேம்படுத்தி, பயனுள்ள முறையில் அதனைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளது.