world

தீக்கதிர் உலக செய்திகள்

வாடகைக் கட்டுப்பாட்டு சட்டம்  கொண்டுவர வலியுறுத்தல் 

அதிக வீடுகளை கட்டுவதால் வீட்டு வாடகை குறை யாது. வாடகை கட்டுப்பாட்டு சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என லண்டன் வாடகைதாரர்கள் சங்கம்  வலி யுறுத்தியுள்ளது. இங்கிலாந்தில் வீட்டு வாடகை 10 சதவீத பணவீக்கத்துடன் உள்ளது.  இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் தனியார் நிறுவனங்கள் மூலம் 3 லட்சம் புதிய வீடுகளை கட்டும் திட்டத்தை லேபர் கட்சி அரசாங்கம் அறிவித்ததை தொடர்ந்து இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

பசிபிக் நாடுகளில் குழந்தைகளுக்கு  ஊட்டச்சத்து குறைபாடு 

பசிபிக் நாடுகளில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு முக்கிய பிரச்சனையாக மாறியுள்ளது என ஐ.நா. குழந்தைகள் நிதியம் தெரி வித்துள்ளது. குழந்தைகள் பிறந்து வளரும் காலத்தில் சரி யான ஊட்டச்சத்து கிடைக்காவிட்டால் குறைந்த வயதில் பலியாகும் எண்ணிக்கை அதிகரிக்கும். ஊட்டச்சத்து பிரச்சனை  “முற்றிலும் தவிர்க்கக்கூடியது” தான். அதற்காக உலக நாடுகள் இணைந்து செயல் பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

50சதவீத துறைமுக தொழிலாளரை   பணியிலிருந்து நீக்க இஸ்ரேல் முடிவு 

செங்கடலில் இஸ்ரேல் தொடர்புடைய வணிக கப்பல்கள்  மீது ஹவுதி அமைப்பு  தாக்குதல் நடத்துவதால் இஸ்ரேலின் துறைமுகங்களில் வணிக செயல்பாடுகள் குறைந்து விட்டது. இதனால் கிட்டத்தட்ட 100 கோடி வரை பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. பொருளாதார இழப்பு  காரணமாக இலியாட் துறைமுகத்தில் 50 சதவீத தொழி லாளர்களை  பணியிலிருந்து நீக்க திட்டமிட்டுள்ளதாக துறைமுக தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

எத்தியோப்பிய நிலச்சரிவில்  146 பேர் பலி 

தெற்கு எத்தியோப்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை  146 ஆக உயர்ந்துள் ளது. மேலும் அந்நாட்டு அதிகாரிகள் பலி எண்ணிக்கை  இன்னும் உயரலாம் என  எச்சரித்துள்ளனர்.கெஸ்-கோஃபா மாவட்டத்தில் காலை 10 மணி அளவில் தொலைதூர குக்கி ராமத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 90க்கும் அதிகமான ஆண்கள் 50 பெண்கள் பலியாகி யுள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.