world

img

காசா மீது இஸ்ரேல் போர் சில முக்கிய கள நிகழ்வுகள்

  1.     போர் நிறுத்தம் நீட்டிப்பு குறித்து சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து சாதகமான சமிக்ஞைகள் வந்துள்ளன என எகிப்து அரசாங்கம் தெரிவித்துள்ளது. சிறைவாசிகள்/ பணயக் கைதிகள் பரிமாற்றம் பணிகளை ஒருங்கிணைக்க கத்தார் பிரதிநிதிகள் இஸ்ரேல் சென்றுள்ளனர். 
  2.  
  3.     ஏமனின் ஹவுத்தி அமைப்பு மீண்டும் ஒரு இஸ்ரேல் கப்பலை கைப்பற்றி தனது கடல்பகுதிக்கு கொண்டு சென்றுள்ளது.
  4.     பாலஸ்தீனியர்கள் தாக்கப்படுவது பயங்கரவாதம்தான் எனவும் அது  போர் எனும் செயலுக்கு அப்பாலும் சென்றுள்ளது எனவும் போப் ஆண்டவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஹமாசின் பணயக் கைதிகள் சிறைபிடித்ததும் கடுமையான விமர்சனத்துக்குரியது எனவும் இரன்டுமே  உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் போப் ஆண்டவர் வற்புறுத்தியுள்ளார்.
  5.     காசா பகுதியில் போர் நிறுத்தம் ஏற்பட்டிருந்தாலும் மேற்கு கரை பகுதியில் இஸ்ரேலிய
  6. ராணுவம் பாலஸ்தீனியர்களை கைது செய்வதும் தாக்குவதும் தொடர்கிறது.
  7.     இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின்  ராஜினாமா கோரி அவரது இல்லம் முன்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன.
  8.     ஜான் பில்போட் எனும் அமெரிக்காவை சேர்ந்த சர்வதேச குற்றவியல் வழக்கறிஞர் இஸ்ரேலின் இன அழிப்பு வேலை அமெரிக்காவின் ஆசியுடன்தான் அரங்கேற்றப்பட்டுள்ளது எனவும் அதற்கு ஆதாரங்கள் உள்ளன எனவும் கூறியுள்ளார். 
  9.     1990களில் இஸ்ரேலுடன் ஏற்பட்ட ஜோர்டானின் ஒப்பந்தம் பாலஸ்தீனிய மக்கள் மீது சுமத்தப்பட்ட துன்பங்கள் காரணமாக மிகப்பெரிய நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்த ஒப்பந்தம் முறிந்தாலும் ஆச்சர்யம் இல்லை என கூறப்படுகிறது. ஜோர்டானின் மக்கள் தொகையில் 20% முதல் 30%க்கும் அதிகமானவர்கள் பாலஸ்தீனியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
  10.     இஸ்ரேலிய ராணுவ அமைச்சர் யோவ் கலண்ட் போர் நிறுத்தம் முடிந்தவுடன் தனது  முழு ராணுவ பலத்தையும் பயன்படுத்தி தாக்குதலை தொடரப்போவதாக கூறியுள்ளார். 
  11.     இதுவரை இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் 70% பேர் பெண்களும் குழந்தைகளும் என ஐ.நா.சபையின் அகதிகள் நல பிரிவு கூறியுள்ளது.
  12.     இஸ்ரேலுக்கு சைப்ரஸ் தேசத்தில் உள்ள ராணுவ தளம் மூலம் தான் செய்யும் ராணுவ உதவியை எவரும் வெளியிடாத வண்ணம் பிரிட்டன் சட்டங்களையும் நடைமுறைகளையும் அமலாக்கியுள்ளது.
  13.     நிரந்தர போர் நிறுத்தம் தேவை என 43 அமெரிக்க நாடாளுமன்ற உருப்பினர்கள் பைடனுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அமெரிக்க மக்களில் சுமார் 70% பேர் இஸ்ரேலை விமர்சிக்கின்றனர். எனினும் இவையெல்லாம் பைடனின் செவிட்டு காதுகளுக்கு எட்டுவதாக தெரியவில்லை