டெல் அவிவ், ஆக.6- பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் ஒரு ஐந்து வயதுக் குழந்தை உள்பட பத்து அப் பாவிகள் படுகொலை செய்யப்பட்டி ருக்கிறார்கள். ஏற்கனவே பாலஸ்தீனத்தின் காசாப் பகுதியுடனான எல்லையில் தனது ராணு வத்தை குவித்து வருவதாக அதிகாரப் பூர்வ அறிவிப்பை இஸ்ரேல் வெளியிட் டது. பாலஸ்தீனத்தின் மேற்குக்கரைப் பகுதியில் தனது ஆக்கிரமிப்பு நட வடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல், குடியேற்றங்களையும் மேற் கொண்டு வருகிறது. ஏராளமான பாலஸ் தீனியர்கள் சிறைகளில் அடைக்கப் பட்டுள்ளனர். சிறைகளில் மோசமாக அவர்கள் நடத்தப்படுவதால், சில கைதி கள் காலவரையற்ற உண்ணாவிரதத் தில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக போராட்டங்களும் நடந்து வருகின்றன. இந்நிலையில், இஸ்ரேலின் கவ னம் ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட் டில் உள்ள காசாத் திட்டுப்பகுதி மீது திரும்பியுள்ளது. சர்வதேச சமூகத்தின் கவனம் உக்ரைன் மீது இருப்பதால் தனது படைகளை காசாவின் எல்லைப் பகுதிகளில் குவித்து வருகிறார்கள். ஏராளமான ஆளில்லா விமானங்களை யும் அப்பகுதியில் இஸ்ரேலின் ராணு வம் நிறுத்தியிருக்கிறது. காசாத் திட் டுப்பகுதிக்கு செல்லக்கூடிய அனைத்து பெரிய சாலைகளையும் அடைத்து வைக்கும் பணியிலும் இறங்கியுள்ளனர். இந்தப்பகுதியிலும் தாங்கள் தயா ராக இருப்பதைக் காட்டுவதே தங்கள் நோக்கம் என்று இஸ்ரேலிய ராணுவம் சொன்னாலும், காசாப்பகுதியை முற்று கையிடும் எண்ணத்தில்தான் இந்தப் பணிகள் நடப்பதாக பாலஸ்தீனத்தின் நிர்வாகம் கூறுகிறது. இஸ்ரேலின் பிற பகுதிகளில் இருந்து, காசாத் திட்டுப் பகுதிக்கு செல்வதற்கு முக்கியமான பாதையாக இருக்கும் எரெஸ் குறுக்குச் சந்திப்பை கடந்த மூன்று நாட்களாக அடைத்து வைத்திருப்பதை அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
சட்டவிரோதத் தாக்குதல்கள்
பாலஸ்தீன இஸ்லாமிய ஜிகாத் என்ற அமைப்பு மீது நடவடிக்கை எடுப்ப தாகக் கூறிக்கொண்டு காசாத்திட்டுப் பகுதிகளுக்குள் இஸ்ரேலியப் போர் விமானங்கள் குண்டுமழை பொழிகின் றன. பலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மேலும் 55 பேர் காயமடைந்தனர். காய மடைந்தவர்களில் பலரும் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்றனர். 100 ராக்கெட்டுகளுக்கு மேல் காசாப் பகுதி மீது ஏவப்பட்டதாக செய்தி நிறுவனங் கள் கூறுகின்றன. “எதிரியான இஸ்ரேல் இந்த சண்டை யைத் தொடங்கியிருக்கிறது. புதிய குற்றத்தைச் செய்துள்ளது. அதற்கான விலையை அவர்கள் அனுபவிக்க வேண் டும். முழுப் பொறுப்பையும் அவர்கள் ஏற்றுக் கொள்ளவும் வேண்டும்” என்று காசாப் பகுதியை நிர்வகிக்கும் ஹமாஸ் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் பாசி பர்ஹோம் எச்சரித்துள்ளார். அண் மைக்காலங்களில் இரு தரப்புக்கு இடை யில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளை எகிப்து செய்து வந்தது. அந்த முயற்சிக்கு இது தடையாக இருக் கும் என்று கூறப்படுகிறது.