வேலூர், செப். 17- தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இலங்கைத் தமிழர்களுக்காக ரூ.79.70 கோடியில் கட்டி முடிக்கப் பட்டுள்ள 1,591 குடியிருப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூரில் இருந்து ஞாயிறன்று (செப்.17) காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். வேலூர் மேல்மொனவூர் பகுதி யில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ. 79 கோடியே 70 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 1,591 குடியிருப் புகளை ஞாயிறன்று (செப்.17) முதல மைச்சர் திறந்து வைத்தார். சேலம், தருமபுரி, திருவண்ணா மலை, கோவை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கட்டப்பட்ட வீடுகளை காணொலி வாயிலாக திறந்து வைத்த அவர், பயனாளிகளுடன் உரையாடினார். தொடர்ந்து அந்த வீடுகளை ஆய்வு செய்தார். தமிழ்நாட்டிலுள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் தமிழர்களுக்கு மாநில அரசு சார்பில் வீடு கட்டும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021 நவம்பர் மாதம் வேலூர் அருகே மேல்மொணவூர் முகாமில் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் முதற்கட்ட மாக ரூ.142.16 கோடி மதிப்பில் மொத்தம் 3,510 வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டது. இதில், தற்போது 13 மாவட்டங்களில் உள்ள 19 இலங்கை தமிழர் முகாம்களில் மொத்தம் ரூ.79.70 கோடி மதிப்பில் 1,591 வீடுகள் கட்டி முடிக்கப்பட் டுள்ளது குறிப்பிடத்தக்கது. விழாவில் அமைச்சர் துரை முருகன், ஐ.பெரியசாமி, பெரிய கருப்பன், செஞ்சி மஸ்தான், ஆர்.காந்தி, அன்பில் மகேஸ் பொய்யா மொழி உள்ளிட்டோர் பங்கேற் றனர்.