world

img

ஒட்டுமொத்த உலகின் கடன் 226 லட்சம் கோடி டாலர் நெருக்கடி தீவிரமாகிறது

வாஷிங்டன், டிச.20- 2020 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த உலகின் கடன் பெரும் அளவில் அதி கரித்துள்ளதாக சர்வதேச நிதியம் (ஐ.எம்.எப்) கூறியுள்ளது. கோவிட்-19 மற்றும் மந்தமான நிலை ஆகியவற்றால் உலகப் பொரு ளாதாரம் பெரும் பாதிப்புக்கு உள்ளா கியுள்ளது. ஒட்டுமொத்த உலக உற் பற்பத்தியில் கடனின் அளவு 256 விழுக் காடாக 2020 ஆம் ஆண்டில் அதிக ரித்திருக்கிறது. ஒரே ஆண்டில் இவ்வ ளவு பெரும் கடன் அதிகரிப்பு இரண்டாம் உலகப் போருக்குப் பின் தற்போது தான் நிகழ்ந்திருப்பதாக ஐ.எம்.எப். புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. 2020 ஆம் ஆண்டுக்கான கடன் நிலைமையை ஆய்வு செய்தபோது 226 லட்சம் கோடி டாலராக அதிகரித்தி ருப்பது தெரிய வந்திருக்கிறது. இது குறித்து மேலும் தகவல்களை ஐ.எம்.எப். நிதித்துறை இயக்குநரான விடோர் கஸ்பர் பகிர்ந்திருக்கிறார். தனது நண்பர்களோடு இணைந்து ஒரு கட்டுரையை அவர் எழுதியி ருக்கிறார். பலவீனமான பகுதிகளை பெரிய அளவில் இது பாதிக்கும் என்ப தால் நிதிக் கொள்கைகள் நாடுகள் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டியிருக்கும் என்று பரிந்து ரைக்கிறார்.

வளர்ந்த நாடுகளில் அதிகரித் துள்ள கடன் நிலைமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வளர்ந்த நாடுக ளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடன் 70 விழுக்காடு என்று 2007 ஆம்  ஆண்டில் இருந்தது. அது தற்போது 124 விழுக்காடாக அதிகரித்துள்ளது. தனியார் துறை கடனும் 178 விழுக் காடாக உயர்ந்துள்ளது.  தனது கடன் நிலைமை பெரும் நெருக்கடியில் சிக்குவதால் வேகத்தடை போடும் பணியைத் துவங்கி விட்டோம் என்று அமெரிக்க மத்திய வங்கி அதி காரிகள் கூறியிருக்கிறார்கள். வலுவான, பலன் தரக்கூடிய சர்வ தேச அளவிலான ஒத்துழைப்பு மற்றும் வளரும் நாடுகளுக்கு ஆதரவு ஆகிய நடவடிக்கைகள்தான் கடன் நெருக்கடியை எதிர்கொள்ள பெரிய அளவில் உதவும் என்றும் சிஜார்ட்டோ மற்றும் அவரது நண்பர் கள் பரிந்துரைக்கிறார்கள். சந்தை யின் நம்பிக்கையைத் தக்க வைக்கும் நடவடிக்கைகளை உடனடியாக சில நாடுகள் எடுத்தாக வேண்டும் என்றும்  அவர்கள் ஆலோசனைதருகின்றனர். ஏற்கனவே துயரத்தில் சிக்கி யுள்ள சாமானிய மக்கள்தான் மேலும் நெருக்கடியில் தள்ளப்படுவார்கள் என்று சில பொருளாதார வல்லுநர் கள் கருத்து தெரிவித்துள்ளனர். கோவிட்-19 பரவலின்போது கூட இவர்கள் கண்டுகொள்ளப்படவில்லை என்று ஆப்பிரிக்காவில் தடுப்பூசி  மிகவும் குறைவாகப் போடப்பட்டுள் ளதை சுட்டிக்காட்டுகிறார்கள். 

;