வியட்நாம் புரட்சியாளர் ஹோ சி மின்னின் சிலை கிரீஸ் நாட்டின் வடபகுதியில் உள்ள நகரமான எடிசாவில் வைக்கப்படவுள்ளது. தற்போது வியட்நாமுக்கு அதிகாரப்பூர்வமான பயணத்தை மேற்கொண்டிருக்கும் கிரீசின் வெளியுறவுத்துறை அமைச்சர் நிகேஸ் டென்டியாஸ் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்திலும் அவர் இதைப் பகிர்ந்திருக்கிறார். தனது பயணத்தின்போது வேறு சில இருதரப்பு ஒத்துழைப்பு உடன்பாடுகளிலும் கையெழுத்திடப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.