world

img

தீக்கதிர் உலக செய்திகள்

இஸ்ரேலின் இனப்படுகொலைகளை  ஒப்புக்கொள்ள மறுக்கும் பைடன்

காசாவில் இஸ்ரேல் நடத்துவது இனப்படு கொலை இல்லை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற யூத அமெரிக்க பாரம்பரிய  நிகழ்வில் தெரிவித்துள்ளார். ஆயுதங்கள் கொடுப்பது முதல் ஐநா அவையில் போர் நிறுத்தத்தை நிராகரிப் பது வரை அமெரிக்கா இஸ்ரேலின் இனப்படுகொ லைக்கு முழு ஆதரவு கொடுத்து வருவது குறிப்பி டத்தக்கது. அமெரிக்காவின் இனப்படுகொலை ஆத ரவை கண்டித்து  பைடன் பங்கேற்கும் ஒவ்வொரு நிகழ்விலும் பாலஸ்தீன ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விபத்து ஏற்படுத்திய  இந்திய மாணவர்கள் பலி

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள அல்பரெட்டாவில் மிக அதிவேக மாக கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில் மூன்று இந்திய-அமெரிக்க மாணவர்கள் பலியாகி யுள்ளனர். ஐந்து பேர் பயணித்த காரில்  ஆர்யன் ஜோஷி, ஸ்ரீயா அவ்சராலா அன்வி ஷர்மா ஆகிய மூன்று பேர் பலியாகியுள்ளனர். பலியான மூன்று பெரும் 18 வயதானவர்கள் என்றும் அதில் இரு வர் பெண்கள் என்றும்  அல்பரெட்டா காவல்துறை தெரிவித்துள்ளது.  மேலும் இருவர் படுகாயங்க ளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

ஆப்கன் வெள்ளத்தால்  30 ஆயிரம் பேர் பாதிப்பு

இந்த ஆண்டு துவக்கம் முதல் ஆப்கானிஸ் தானில்  ஏற்பட்ட வெள்ளத்தால் கிட்டத்தட்ட 30 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐநா அவை தெரிவித்துள்ளது. மேலும் அம்மக்களு க்கு  மிக வேகமாக தங்குமிடம், மருந்துகள், உணவு, பாதுகாப்பான குடிநீர் மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்யவேண்டிய தேவை உள்ளது. இதற்கு அதிக உதவிகளும் வேண்டும் என கோரியுள்ளது. சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தை தொடர்ந்து வயிற்றுப் போக்கு மற்றும் நோய்த்தொற்றுகள் அதிகரித்துள் ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

பொருளாதார மேம்பாட்டிற்கு  புதிய சட்ட மசோதாக்கள் 

இலங்கையின் பொருளாதாரத்தை மேம் படுத்தும் நோக்கில் இரண்டு முக்கிய சட்ட மசோதாக்களை இலங்கை அரசு சமர்ப்பிக்க வுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளா தார உருமாற்ற சட்ட மசோதா மற்றும் பொது நிதி மேலாண்மை சட்ட மசோதா  ஆகிய இரு மசோ தாக்களை இலங்கை அரசு கொண்டுவர உள்ளது. இந்த சட்டங்கள்   வருவாயை அதிகரித்து எதிர் கால பொருளாதார வீழ்ச்சியை  தடுக்கும் என வும்  நிதி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க செய்தி யாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

பாக் - சீனா உறவு  உறுதியானது

பாகிஸ்தான் - சீனாவிற்கு இடையிலான உறவு பாறை போல மிகவும் உறுதியா னது என பாக் ஜனாதிபதி  ஆசிப் அலி ஜர்தாரி தெரி வித்துள்ளார். சீனா - பாக்  தூதரக உறவு துவங் கப்பட்டு 73 ஆவது ஆண்டு நிறைவை முன்னி ட்டு, மே 21 அன்று அவர் சீன ஊடகத்திற்கு சிறப்பு பேட்டி  கொடுத்த போது இதனை தெரிவித்தார்.சர்வதேச நிலைமை எவ்வாறு மாறினாலும், பாக் - சீன உறவு எப்போதும் பாறை போல உறு தியாக இருக்கும் என்றும் நாடுகளுக்கிடையிலான நல்ல நட்பிற்கு முன்மாதிரியாக இரு நாடுகளும் திகழ்ந்து வருகின்றன என்றும் ஜர்தாரி கூறினார்.

;