world

ராணுவச் செலவில் அமெரிக்கா முதலிடம்

வாஷிங்டன், செப்.10- 2021-ஆம் ஆண்டில் அதிகமான அளவில் ராணுவத்திற்குச் செலவு செய்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா வழக்கம் போலவே முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ராணுவத்திற்கான செலவுகளில் அமெரிக்காதான் முதலிடம் பிடித்து வருகிறது. பனிப்போர் நிறைவு பெற்ற பிறகு, ராணுவச் செலவு குறைந்து விடும் என்ற கணிப்புகள் பலிக்கவில்லை. சொல்லப்ப்போனால், அதன்பிறகுதான் செலவுகள் பெருமளவு அதிகரித்துள்ளன. உலகின் பல பகுதிகளிலும் பதற்றத்தை ஏற்படுத்தி அதன் மூலம் ஆயுதங்களை மற்ற நாடுகளின் தலைகளில் கட்டும் வேலையில் அமெ ரிக்கா தற்போது தீவிரமாக இறங்கியுள்ளது. உக்ரைன் நெருக்கடியில், அதைத் தீர்ப்ப தில் கவனம் செலுத்தாமல் அந்நாட்டுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதில் மட்டும் கவனமாக இருக்கிறது.  2021-ஆம் ஆண்டில் மட்டும் 80 ஆயிரத்து 100 கோடி அமெரிக்க டாலரை ராணு வத்திற்காக அமெரிக்கா செலவிட்டிருக்கிறது.

உலகம் முழுவதும் ராணுவத்திற்காக செலவிடப்பட்ட தொகையில் (2.1 லட்சம் கோடி அமெ ரிக்க டாலர்) இது 30 விழுக்காடாகும். உலக மக்களைப் பாதுகாக்கவே மற்ற நாடுகளுக்கு ஆயுதங்களை அனுப்புகிறோம் என்று கூறும் அமெரிக்கா, ஆயுதங்கள் அனுப்பப்படும் நாடு களில் நெருக்கடியும், உயிரிழப்புகளும் அதி கரித்திருப்பதற்கான காரணங்களைக் கூறுவ தில்லை என்று நிபுணர்கள் கேள்வி எழுப்புகி றார்கள். மேலும், தவறான கைகளில் ஆயு தங்கள் சென்றடைவதைத் தடுக்கவும் அமெ ரிக்கா இதுவரையில் முயற்சிக்கவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர். வரும் நாட்களில் ஆயுத விற்பனை அதிக ரிக்கப் பல்வேறு முயற்சிகளை அமெரிக்கா எடுக்கப் போவதாக வால் ஸ்டிரீட் ஜர்னல் நாளிதழ்  செய்தி ெளியிட்டுள்ளது. ஆளில்லா விமானங்கள், துப்பாக்கிகள், ஹெலிகாப்டர்கள், பீரங்கிகள் உள்ளிட்ட அமெரிக்க ஆயுதங்களை விற்கப் போகிறார்கள். இந்த இலக்குக ளைக் கவனித்துக் கொள்வதற்காக ஒரு குழு வையும் அமெரிக்க அரசு அமைத்துள்ளது.

;