ஓய்வூதியத்தை சீர்குலைக்கும் திட்டத்தைத் திரும்பப் பெறுமாறு பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனை வலியுறுத்தும் வகையில் தொழிலாளர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். முழு ஊதியத்தைப் பெற 43 ஆண்டுகள் பணிபுரிந்தாக வேண்டும் என்ற அம்சத்தைப் புதிய திட்டத்தில் சேர்ப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் எதிர்ப்பை சந்திக்கின்றன.