what-they-told

புதிய கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவக் கூடும்

பிரிட்டன் நிபுணர்கள் கருத்து

கொரோனா வைரசின் புதிய வகையை சிலர் ‘டெல்டா பிளஸ்’ என்று அழைக்கிறார் கள். அந்த வகை வைரஸ் டெல்டா  வைரசை விட எளிதாக பரவக்கூடிய தாக இருக்கலாம் என்று பிரிட்டனைச் சேர்ந்த நிபுணர்கள் கருதுகின்றனர். இது தொடர்பாக பிபிசி இணைய செய்திகள் பிரிவின் சுகாதார ஆசிரியர் மிஷெல் ராபர்ட்ஸ் கூறியிருப்பதாவது: யுகே சுகாதார பாதுகாப்பு அமைப்பு, இந்த வகை வைரசை ‘ஆய்வில் உள்ள திரிபு’ என்று வகைப்படுத்தியுள்ளது. ஆயினும், இந்த புதிய டெல்டா பிளஸ் வகை ஏற்கெனவே உள்ள வகைகளை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று சொல்வதற்கான ஆதாரம் எதுவும் இது வரையில் கிடைக்கவில்லை. அதனால் தற்போது பயன்பாட்டில் இருக்கும் கொரோனா தடுப்பூசிகளே, இந்த வகைக்கு எதிராகவும் சிறப்பாக வேலை செய்யும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். பிரிட்டனில் ஏற்படும் கொரோனா தொற்றில் வழக்கமான டெல்டா வகை வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. தற்போது டெல்டா பிளஸ் அல்லது AY.4.2 என்றழைக்கப்படும் இந்த வகை யால் பாதிக்கப்படுபவர்களின் எண் ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு களில் ஆறு சதவீதம் பேர் இந்த வகை வைரசால் பாதிக்கப்பட்டிருப்பதாக அண்மைக் கால அதிகாரப்பூர்வ தரவு கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், பிரிட்டனின் டெல்டா  வகையை விட, டெல்டா பிளஸ் வகை வைரசின் பரவும் விகிதம் அதிகமாக இருப்பதாக சில ஆரம்பக் கட்ட ஆதா ரங்கள் கிடைத்திருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இவை ஒரு புறமிருக்க, டெல்டா வகையைப் போல, டெல்டா ப்ளஸ் வகை கவலைக்குரிய வைரஸ் வகைகளில் ஒன்றாக கருதப்படவில்லை. இது தான் கொரோனா வகைகளின் ஆபத்தை பொறுத்து வழங்கப்படும் படிநிலை களில் உச்சபட்சமானது என்பது குறிப்பி டத்தக்கது.

உலக அளவில் பல கொரோனா வகைகள் உள்ளன. வைரஸ் பிறழ்வு எப்போதுமே வழக்கமாக நடக்கும் ஒன்று தான், எனவே புதிய வகையைக் காண்ப தில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. AY.4.2 வகையில் உள்ள சில புதிய பிறழ்வுகள் மனித உடலுக்குள் இருக்கும் செல்களை பாதிக்கக்கூடிய, வைரஸ் பயன்படுத்தப்படும் ஸ்பைக் புரதங் களை பாதிப்பதாக உள்ளன. கொரோனா பெருந்தொற்று தொடங்கியதிலிருந்தே Y145H மற்றும் A222V பிறழ்வுகள் பல்வேறு கொரோனா துணை வரிசைகளில் காணப்பட்டன. தற்போது இருக்கும் கொரோனா வைரசின் பல்வேறு வகைகளுக்கு எதி ராக, புதிய கொரோனா தடுப்பூசி மேம் பாடு தொடர்பாக எந்த வித பரிந்துரை களும் இல்லை.

பிரிட்டனின் சுகாதார பாதுகாப்பு முக மையின் மருத்துவர் ஜென்னி ஹாரிஸ், “எல்லா கொரோனா திரிபுகளுக்கும் ஒரே மாதிரியான பொது சுகாதார அறி வுரைகள்தான் வழங்கப்படுகின்றன. யார் எல்லாம் தடுப்பூசி செலுத்திக் கொள் ளத் தகுதியானவர்களோ, அவர்கள் எல்லாம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள், உங்களுக்கு எப்போது பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ள அழைப்பு விடுக்கப்படு கிறதோ, அப்போது முன்வந்து பூஸ்டர் டோஸை செலுத்திக் கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார். மேலும், “எப்போதும் எச்சரிக்கை யோடு இருங்கள். மக்கள் நெருக்க மாக இருக்கும் இடங்களில் முகக்கவசம் அணிந்து கொள்ளுங்கள், மற்றவர் களை உள் அரங்குகளில் சந்திக்கும் போது காற்றோட்டத்துக்காக ஜன்னல் கதவுகளை திறந்துவிடுங்கள். கொரோனா அறிகுறிகள் இருந்தால் பிசிஆர் சோதனை செய்து கொள்ளுங்கள், நெகட்டிவ் என சோதனை முடிவு கிடைக் கும் வரை சுயமாக தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்” என்று அவர் கூறி யுள்ளார்.

;