what-they-told

img

நீலகிரி: தேயிலைத் தோட்டங்களில் வடமாநில குழந்தை தொழிலாளர்கள்?

ஏஜெண்டுகள் மூலம் தேயிலை தோட்டங்களில் பணிபுரிய கொண்டு அழைத்து வரப்பட்ட வடமாநில தொழிலாளர்கள் இரவில் எங்கே செல்வது என தெரியாமல் சாலையில் தவிக்கின்றனர்.

உதகை, செப்.24- வடமாநிலங்களில் இருந்து ஏஜெண் டுகள் மூலம் அழைத்து வரப்படும் தேயி லைத் தோட்ட தொழிலாளர்களின் பாது காப்பை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள தேயி லைத் தோட்டங்களில் பணிபுரிய ஆட் கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் உதகை, குன்னூர், கூடலூர், சேரம்பாடி, சேரங்கோடு, பந்தலூர், கோத்தகிரி மற் றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள தேயிலை எஸ்டேட்டில் பணிபுரிய வட மாநில தொழிலாளர்கள், ஏஜெண்டுகள் மூலமாக அழைத்து வரப்படுகின்றனர். இந்நிலையில், தேயிலை எஸ்டேட்டில் போதிய பாதுகாப்பு வழங்கப்படுவது இல்லை என பல்வேறு இடங்களில் இருந்து குற்றச்சாட்டு எழுவதால், தொழிலாளர்களுக்கு பல இன்னல்கள் ஏற்படுகின்றன.  மேலும், வடமாநிலங்களில் இருந்து பெற்றோருடன் குழந்தைகளும் வருவ தால், அவர்கள் பள்ளிக்கு செல்ல முடி யாமல் தேயிலை தோட்டத்திலேயே பணிபுரிகின்றனர். இதனால் குழந்தை கள் கல்வியை தொடர முடியாமல் அவர் களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடுகிறது. சில தோட்டங்களில் குழந் தைகள் தொழிலாளர்களாக பணியில் அமர்த்தபடுகின்றனர். இதனால் குழந் தைகள் பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆளாகின்றனர் என கூறப்படுகிறது.

குறிப்பாக, பெண் குழந்தைகளின் பாது காப்பு கேள்விக்குறியாகி உள்ளது. முன்னதாக, கடந்த 2020 டிசம்பர் மாதம் உதகை அருகே கொலக் கொம்பை என்ற இடத்தில் உள்ள எஸ் டேட்டில் பணிபுரிந்த ஜார்க்கண்ட் பகு தியைச் சேர்ந்த தம்பதியின் 8 வயது சிறுமி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு சுமார் 10 நாட்களுக்கும் மேல் பல இடங்களில் தேடி உடல் கண் டுபிடிக்கப்பட்டது. இதுவரை இவ் வழக்கு குறித்து வேறு எந்த தடயமும் கிடைக்கவில்லை. அந்த சம்பவம் நடந்து சில தினங்களில் அதே பகுதியில் வசித்த ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் மனைவி மற்றும் 2 குழந்தைகளை கொன் றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி யில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த உயிரிழப்புகள் குறித்தும் எந்தவித விடை யும் கிடைக்காமல் உள்ளது.  இதேநிலை தொடராமல் இருக்க வட மாநிலத்தில் இருந்து நீலகிரி மாவட் டத்திற்கு புலம்பெயர்ந்து வரும் தொழி லாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும், பெண் குழந்தை கள் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் சம்மந்தப் பட்ட அரசு துறையினர் உடனடியாக நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  அதேபோன்று ஏஜெண்டுகள் மூலம் வரும் தொழிலாளர்களுக்கு உரிய சம்ப ளம் வழங்கப்படுகிறதா? அல்லது குறை வான சம்பளம் வழங்கப்படுகிறதா? என வும், தொழிலாளர்கள் கொத்தடிமைக ளாக பணியாற்றுகின்றனரா? என்பன குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. (ந.நி)

;