what-they-told

img

எடை குறைந்த எரிவாயு சிலிண்டர் இந்தியன் ஆயில் அறிமுகம்

 சென்னை, அக். 15-  இந்தியன் ஆயில் நிறுவனம் புதிய நவீன எடை குறைந்த காம்போசிட் சிலிண்டரை சென்னையில் நடந்த எளிய நிகழ்ச்சியில் அறிமுகம் செய்தது. இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவர் எஸ் .எம். வைத்யா வெளியிட, அதனை பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய வைத்யா  இந்தியன் ஆயில் நிறுவனம் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் விதத்தில் தங்களது தயாரிப்பிகளில் தொடர்ந்து புதுமைகளை புகுத்தி வருகிறது என்று குறிப்பிட்டார். அதனை பெற்றுக் கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ், ‘இது போன்ற நேர்த்தியான வடிவமைப்புடன் கூடிய எடை குறைவான சிலிண்டர்கள் பெண்களை கவர்வதுடன், அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் இந்தியன் ஆயில் நிர்வாக இயக்குனர்  மற்றும் தமிழ்நாடு ,புதுவை  மாநில தலைவர் பி.ஜெயதேவன்  மற்றும் தென்  பிராந்திய நிர்வாக இயக்குனர் கே.சைலேந்திரா ஆகியோரும் இடம் கலந்து கொண்டனர்.  இந்த புதுவகை காம்போசிட் சிலிண்டர்கள் 10 கிலோ மற்றும் 5 கிலோ எடை பிரிவுகளில் விற்பனைக்கு வந்துள்ளது. இதில் 5 கிலோ காம்போசிட் சிலிண்டர்கள் வெளிச் சந்தையிலும் எளிதில் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது சந்தையில் கிடைக்கும் சாதாரண இன்டேன் சிலிண்டர்களை காட்டிலும் இந்த எடை குறைந்த காம்போசிட் சிலிண்டர்கள் கூடுதல் வலுவானது மற்றும் பாதுகாப்பானது என்று இந்திய ஆயில் நிறுவனம் கூறியுள்ளது.

;