what-they-told

img

ரயில் பாதையை கடக்க முயன்ற டிப்பர் லாரி மீது ரயில் மோதி விபத்து

கிருஷ்ணகிரி, செப்.21- ஓசூர் அருகில் கர்நாடகா மாநில எல்லைக்  குள் உள்ள அவளஹள்ளி அருகில் ரயில் பாதையை கடக்க முயன்ற டிப்பர் லாரி மீது  ரயில் மோதி விபத்து ஏற்பட்டது ஓசூரை அடுத்த  கர்நாடக மாநிலம் ஆனே கள் அருகே அவளஹள்ளி பகுதியில் ரயில்வே  பாதையை கடக முயன்ற டிப்பர் லாரி மீது  மைசூரிலிருந்து பெங்களூரை கடந்து ஓசூர்  நோக்கி வந்த தஞ்சாவூர் எக்ஸ்பிரஸ் பயணி கள் ரயில் மோதி விபத்துக்குள்ளானது, மைசூரிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு தஞ்சாவூர் எக்ஸ்பிரஸ் பயணிகள்  ரயில் இரவு 9 மணிக்கு  பெங்களூருவை கடந்து ஓசூரை நோக்கி வந்து கொண்டி ருந்தது. ஆனேகல் மாவட்டம், ஹூஸ்கூர் பகுதி அருகே உள்ள அவளஹல்லி அருகில்  டிப்பர் லாரி இரயில்வே பாதையை கடக்க முயன்ற பேறு ரயில் அருகில் வந்து விட்டதை  கண்டு பயத்தின் காரணமாக டிப்பர் லாரியை  நிறுத்திவிட்டு ஓட்டுனர் அதிலிருந்து குதித்து  தப்பி ஓடியுள்ளார். அருகில் வந்த ரயில் டிப்பர் லாரி மீது மோதி  சில கிலோ மீட்டர் தூரம் இழுத்து சென்று  ரயில்வே மின் கம்பத்தில் மோதி பக்கவாட்டில்  தள்ளியுள்ளது. இந்த விபத்தில் ரயிலில் இருந்த பயணிகள்  உயிர் சேதம் ஏதும் ஏற்படாமல் தப்பினர். டிப்பர் லாரி பாகங்கள் ரயில் இன்ஜின் அடியில் சிக்கியுள்ளதை அப்புரப் படுத்தும்.  பணியில் ரயில்வே துறை மற்றும் ஹெப கோடி காவல்துறையினர் ஈட்டுப்பட்டனர். இந்த விபத்து காரணமாக இந்த வழியாக  செல்லும் ரயில்கள் செல்வதில் சில மணி நேர தாமதம் ஏற்பட்டது.

;