வெள்ளி, பிப்ரவரி 26, 2021

weather

img

9 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும்...

சென்னை:
தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.சிவகங்கை, விருதுநகர், புதுக் கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப் பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் மற்ற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும்.ஜன.8 ஆம் தேதி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும். ஜன.9 ஆம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழையும், மற்ற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக் கூடும்.

வருகிற 10 ஆம் தேதி ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, திருச்சி, கரூர் மாவட்டங்களில் கன முதல் மிக கன மழையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், திருநெல்வேலி மற்றும் புதுச்சேரியில் கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.11 ஆம் தேதி ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, திருச்சி, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், நெல்லை மற்றும் புதுச்சேரியில் கன மழையும் மற்ற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும்.சென்னை மற்றும் புறநகர் பகுதியை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

;