tamilnadu

img

ஆசிய- பசிபிக் பிராந்திய தாராள வர்த்தக ஒப்பந்தத்தை திரும்பப் பெறுக!

உதகை, நவ. 4-  ஆசிய பசிபிக் பிராந்திய பொரு ளாதார ஒப்பந்தத்தில் கையெழுத் திடுவதை  கண்டித்து  தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தினர் சார்பில் திங்க ளன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  மத்திய அரசு  ஆசிய பசிபிக்  பிராந் தியத்தில்  உள்ள  44  நாடுகளுடன்  பொருளாதார ஒப்பந்தத்தில் கையெ ழுத்திட உள்ளது. இதனால்  விவ சாயிகள் விளைவிக்கும் அனைத் துப் பொருட்களும் பன்னாட்டு நிறுவனங்கள் எவ்வித இறக்குமதி வரியுமின்றி இந்திய சந்தைகளில் இறக்கமதி செய்யும் நிலை ஏற் படும். மேலும்  இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் பால் மற்றும்  பால்  பொருட்கள், இறைச்சி, தானி யங்கள், பழங்கள், உணவு எண் ணெய் இறக்குமதி செய்யப்படும்  சூழல் ஏற்படும். இதனால் இந்திய விவசாயம் பாதிப்பிற்குள்ளாகும். இந்திய  சந்தை  முழுவதும் அந்நிய நாடுகளின் கைகளுக்கு  சென்று விடும். எனவே மத்திய அரசு ஆசிய பசிபிக் பிராந்திய ஒப்பந்தத்தில்  கையெழுத்திடக்கூடாது என வலி யுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள்  சங்கம் திங்களன்று மாநிலம் முழு வதும் கண்டன இயக்கத்திற்கு அறைகூவல் விடுத்தது.  இதன் ஒருபகுதியாக நீல கிரி மாவட்டம், நடுவட்டம்  கடை வீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு சங்கத்தின் தாலுகா தலைவர் கே.ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட  தலைவர் என்.வாசு துவக்கி  வைத்து பேசினார். தாலுகா  செயலாளர் கிருஷ்ணன் கோரிக்கை களை விளக்கிப் பேசினார். மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உதகை தாலுகா செயலாளர் எல்.சங்கரலிங்கம் வாழ்த்திப் பேசினார். விவசாய சங்க நிர்வாகி ஜெயராஜ் நன்றி கூறினார்.  முன்னதாக, இந்த ஆர்ப்பாட் டத்தில் நீலகிரி மாவட்டத்தில் 283 கிராமங்களில் வீடுகள் கட்டுவ தற்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை  உத்தரவை திரும்பப்பெற வலியு றுத்தியும், கைவச நிலத்திற்கு பட்டா  வழங்க வேண்டும் என வலியுறுத்தி யும் முழக்க மிட்டனர். இதில் விவ சாய சங்கத்தினர் ஏராளமானோர்  கலந்து கொண்டனர்.

;