tamilnadu

img

நீர் மேலாண்மை விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

திருப்பூர், அக். 13-  திருப்பூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக வளாகத்தில் ஞாயிறன்று திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் விக்கீஸ் உடற்தகுதி மையம் என்ற  தனியார் நிறுவனமும்  இணைந்து ஆரோக்கியமான - நெகிழி இல்லா மற்றும் நீர் மேலாண்மை வளம் வாய்ந்த திருப்பூர் என்ற தலைப்பில் சிறப்பு மாரத்தான்  போட்டியினை மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் கொடியசைத்து துவக்கி வைத்தார். 3 கி.மீ தொலைவிற்கான மாரத் தான் போட்டியில் 13 வயதிற்குட்பட் டவர்கள் கலந்து கொண்டனர். 10 கி.மீ தொலைவிற்கான மற்றொரு மாரத் தான் போட்டியில் 13 வயதிற்கு மேற் பட்ட ஆண், பெண் இருபாலரும் கலந்து கொண்டனர். இவர்களில் ஆண்களில் முதல் பரிசு ஸ்ரீஜன்பாபு (ரூ.10,000), இரண்டாம் பரிசு கணபதி (ரூ.5,000), மூன்றாம் பரிசு வெங்கடேசன் (ரூ.3,000) பெற்றனர். பெண்கள் பிரிவில் சௌமியா (ரூ.10,000), நீலாம் பரி (ரூ.5,000), நிர்மல் ரோஸ் (ரூ.3,000) ஆகியோர் பரிசு பெற்ற னர். 13 வயதிற்குட்பட்ட குழந்தைக ளுக்கான போட்டியில் பேச்சிமுத்து (ரூ.5,000), யுகேஷ் (ரூ.3,000), முகிலன் (ரூ.2,000), சிறுமிகள் பிரி வில் ரோகினி (ரூ.5,000), கிரிஜா (ரூ.3,000) மற்றும் ஹர்சிதா (ரூ.2,000) பரிசு பெற்றனர்.  மாற்றுத்திறனாளிகளை ஊக்கு விக்கும் வகையில் கலைச்செல்வன் மற்றும் சுரேஷ் ஆகியோருக்கு பரிசு களையும் மாவட்ட ஆட்சியர் வழங்கி னார். திருப்பூர் மாவட்டத்தினை நெகிழி இல்லா பசுமை மிக்க மாவட் டமாக்கிடவும், உடல் ஆரோக்கியத் தினை பேணி பாதுகாத்திடவும் நீர் மேலாண்மை வளம் வாய்ந்த மாவட் டமாக திகழ செய்திட  பொதுமக்கள் அனைவரும் தங்களது பங்கினை ஆற்ற வேண்டுமென ஆட்சியர் தெரி வித்தார்.  இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.சுகுமார், திருப்பூர் வரு வாய் கோட்டாட்சியர் கவிதா, வட் டாட்சியர்கள் முருகதாஸ் (தேர்தல்), மகேஷ்வரன் (திருப்பூர் தெற்கு), ஜெயக்குமார் (திருப்பூர் வடக்கு), கோபாலகிருஷ்ணன் (முத்திரைத் தாள்) மற்றும் அரசு அலுவலர்கள், விக்கி ட்ரக்ஸ் உரிமையாளர் விக்கி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

;