tamilnadu

img

விவசாயிகளுக்கு பாராட்டு விழா

காரியாபட்டி, மே 16- நாடு முழுவதும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இத னால், ஏராளமானோர் தங்களது வீடுகளிலேயே முடங்கியுள்ள னர். இந்த நிலையில், தன்னலம் கருதாமல் பிறர் உயிர் வாழ வேண்டும் என்ற நோக்கத்தோடு  தங்களது நிலங்களில் உணவு தானியங்கள் மற்றும் காய்கறி களை உற்பத்தி செய்து விவசாயி கள் வழங்கி வருகின்றனர்.  இவர்களை  தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தினர் பாராட்டி னார்.  காரியாபட்டியில் நடை பெற்ற நிகழ்விற்கு விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் வட்டச் செயலாளர் பி.மலைச்சாமி தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் ஏ.அம்மாசி, தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வி.முரு கன் உட்பட ஏராளமான விவசாயி கள் கலந்து கொண்டனர். 

500 விவசாயிகளுக்கு பாராட்டு  
அருப்புக்கோட்டை, சாத்தூர், விருதுநகர் தெற்கு ஒன்றியம், இராஜபாளையம் மேற்கு, கிழக்கு ஒன்றியங்கள், வெம்பக் கோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 500 விவசாயிகள் பாராட் டப்பட்டனர். இந் நிகழ்வுகளில் மாவட்டத் தலைவர் அ.விஜய முருகன், மாவட்ட பொருளாளர் மனோஜ்குமார் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.