விழுப்புரம், மார்ச் 3- விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி ஒன்றியத்திற்குட்பட்ட முண்டியம்பாக்கம் கிராமத்தில் நூறு நாள் வேலை கேட்டு மனு கொடுத்து பல மாதங்களாக காத்திருந்தும் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வழங்க வில்லை. இதனால், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான நலச்சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் விக்கிரவாண்டி வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் முறையிட்டனர். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணன் பேச்சுவார்த்தை நடத்தி வேலை வழங்குவதாக கூறினார். ஆனால், ஆண்டுக்கு நூறு நாள்வேலை, தினம் 4 மணி நேர வேலை, கூலி ரூ.229 என மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு ஆணை 52 சட்டப்படி கூறியுள்ள நிலையில், இதுவரை சுமார் 30 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளதாக மாற்றுத்திறனாளிகள் புகார் தெரிவித்ததோடு அலுவலகத்திற்கு வெளியில், வேலை வழங்கும் வரை காத்தி ருக்கும் போராட்டம் நடத்தினர். இதனைய டுத்து, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி தலைமையிலான அதிகாரிகள் மீண்டும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி னர். அப்போது, ஒரு வாரத்தில் வேலை வழங்க உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு மாற்றுத்திற னாளிகள் கலைந்து சென்றனர். ஆர்ப்பாட்டத்தில் கிளை நிர்வாகிகள் தலைவர் ராமமூர்த்தி, ராஜசேகர்,ஆனந்தி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.