tamilnadu

img

யெஸ் வங்கி நிறுவனரின் காவல்நீட்டிப்பு

மும்பை:
பல்லாயிரம் கோடி ரூபாய் பணமோசடியில் யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரின் அமலாக்கத் துறை காவலை நீட்டித்து  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மும்பையை தலைமை யகமாகக் கொண்டு இயங்கிய  யெஸ் வங்கி வராக்கடன் பிரச்சனையில் சிக்கியதால் ரிசர்வ் வங்கி இதன் செயல்பாட்டை முடக்கியது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரை கடந்த8 ஆம் தேதியன்று அமலாக் கத்துறை கைது செய்தது.

ராணா கபூர், ரியல் எஸ்டேட் நிறுவனம் மற்றும்கார்ப்பரேட் நிறுவனங்களி டம் லஞ்சம் வாங்கிக் கொண்டு அதிகளவு கடன்வழங்கியதாக அமலாக்கத் துறை குற்றம்சாட்டியது. இந்தநிலையில் அமலாக்கத்துறையினர் விசாரணை காலம் முடிந்து ராணா கபூரைமும்பை சிறப்பு நீதிமன்றத் தில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிமன்றத்தில் ராணா கபூர், தனக்கு நீண்ட கால ஆஸ்துமா, மன அழுத்தபிரச்சனை இருப்பதாக கூறினார்.எனினும் நீதிபதி ராஜ் வைதியா அவரது அமலாக்கத்துறை காவலை 20 ஆம்தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். இதன் மூலம்அவரது அமலாக்கத்துறை காவல் இரண்டாவது முறை யாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

;