tamilnadu

img

மே மாதத்தில் வாகன விற்பனை 20 சதவீதம் சரிவு

கடந்த மே மாதத்தில், வாகன விற்பனை 20 சதவீதம் சரிந்துள்ளதாக இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில், கடந்த மே மாதத்தில் வீடுகளில் பயன்படுத்தப்படும் வாகன விற்பனை 20.55 சதவீதங்கள் சரிந்து, 2,39,347 யூனிட்கள்் மட்டுமே விற்கப்பட்டுள்ளன. இதுவே கடந்த 2018-ஆம் ஆண்டு மே மாதத்தில், 3,01,238 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டன. இதில், கார் விற்பனை 26.03 சதவீதம் சரிந்து, 1,47,546 யூனிட்களாக விற்பனை குறைந்துள்ளது. இதுவே கடந்த 2018-ஆம் ஆண்டு மே மாதத்தில், 1,99,479 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டன.
அதே போல், மோட்டார் சைக்கிள் விற்பனை கடந்த மே மாதத்தில், 4.89 சதவீதம் சரிந்து, 11,62,373 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதுவே கடந்த ஆண்டு மே மாதத்தில், 12,22,164 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டன. இதை தொடர்ந்து, இரு சக்கர வாகனங்களில் விற்பனை 6.73 சதவீதம் சரிந்து, 17,26,206 யூனிட்கள் மட்டும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதுவே கடந்த ஆண்டு மே மாதத்தில் 18,50,698 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டன.

மேலும், பொது பயன்பாட்டிற்கான வாகனங்கள் விற்பனையும் 10.02 சதவீதம் சரிவு கண்டுள்ளது. மொத்த வாகன விற்பனை, கடந்த மே மாதத்தில், 8.62 சதவீதம் சரிந்து, 20,86,358 யூனிட்களாக மட்டும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு மே மாதத்தில் 22,83,262 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.