tamilnadu

தூத்துக்குடி முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில்  சர்வதேச  யோகா தினம்

தூத்துக்குடி, ஜூன் 21- தூத்துக்குடி, மாவட்ட காவல்துறை அலுவலக மை தானத்தில் எஸ்பி முரளி ரம்பா தலைமையில் சர்வதேச யோகா தினம் நடைபெற்றது. 5வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தூத்து க்குடி மாவட்ட காவல்துறை அலுவலக மைதானத்தில் வெள்ளியன்று காலை மாவட்ட காவல் கண்காணிப் பாளர்முரளி ரம்பா, தலைமை யில்  400 காவல்துறையினர் இந்த யோகா பயிற்சியில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.  முறைப்படி யோகா பயிற்சி பெற்ற முதல் நிலை காவலர் ராஜலிங்கம் பயிற்சி அளித்தார்.

தாமிரபரணி ஆற்றில் மூழ்கி வாலிபர் பரிதாப சாவு

தூத்துக்குடி, ஜூன் 21- ஆத்தூர் அருகே தாமிர பரணி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர் பாராதவிதமாக நீரில் மூழ்கி வாலிபர் ஒருவர் பரிதாபமாக இறந்தார். தூத்துக்குடி மாவட்டம், முக்காணி வடக்கு  யாதவர் தெருவைச் சேர்ந்தவர் மாட சாமி மகன் முத்து (35). இவர் அங்குள்ள கோவில் அருகே உள்ள தாமிரபரணி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தா ராம். அப்போது சகதியில் சிக்கிய அவர் நீரில் மூழ்கி இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு செ்னறு அவரது உடலை மீ்ட்டு பரசோத னைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்ப வம் தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

பைக் மீது லாரி மோதி விவசாயி பலி: டிரைவர் கை

தூத்துக்குடி, ஜூன் 21- தூத்துக்குடி அருகே மோட்டார் பைக் மீது லாரி மோதிய விபத்தில் விவசாயி பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி அருகே உள்ள மேல கூட்டுடன்காடு, அல்லிகுளம் முருகன் நக ரைச் சேர்ந்தவர் ஆனந்த பெருமாள் மகன் காளி (49). விவசாயியான இவர் வியா ழனன்று மேலக்கூட்டுடன் காடு மெயின் ரோட்டில் தனது பைக்கில் சென்று கொண்டி ருந்தார். அப்போது எதிரே வந்தடிப்பர் லாரி பைக் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த காளி, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பலனின்றி இறந் தார். போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

து

;