tamilnadu

img

சென்னையில் உச்சநீதிமன்ற கிளை

மதுரை, மார்ச் 25- ஆங்கிலத்துடன் தமிழையும் நீதிமன்ற  மொழியாக்கும் கோரிக்கையை தலைமை  நீதிபதி பரிசீலிக்க வேண்டும். குறைந்தபட் சம் சென்னை, மும்பை மற்றும் கொல் கத்தா நகரங்களில் உச்ச நீதிமன்ற பெஞ்சு களை நிறுவ வேண்டும் என மதுரையில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் கட்டப்படவுள்ள கூடுதல் நீதிமன்ற கட்டடங்க ளுக்கான அடிக்கல்  நாட்டு விழா மற்றும்  மயிலாடுதுறை மாவட்ட மற்றும் அமர்வு நீதி மன்றம் மற்றும் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் திறப்பு விழா மதுரை யில் சனிக்கிழமை நடைபெற்றது. மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் ரூ.166 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள கூடு தல் கட்டடத்திற்கு  உச்சநீதிமன்ற தலைமை  நீதியரசர் நீதிபதி  டி.ஒய். சந்திரசூட் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து தமிழ்நாடு முதல்வர்,  மயிலாடுதுறையில் அமைக்கப் பட்டுள்ள மாவட்ட மற்றும் அமர்வு நீதி மன்றத்தை திறந்து வைத்தார். ஒன்றிய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண்  ரிஜிஜு  மயிலாடுதுறையில் அமைக்கப்பட் டுள்ள முதன்மைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தை திறந்து வைத்தார். நிகழ்வில் கலந்துகொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதி பதியாகப் பொறுப்பேற்ற பிறகு, தமிழ் நாட்டுக்கு முதன்முதலாக அதுவும் கண்  ணகி நீதி கேட்ட பெருமைக்குரிய மதுரைக்கு  வந்துள்ளீர்கள். தங்களுக்கு எனது வாழ்த் துகளைத் தெரிவித்து, தமிழ்நாட்டின் முத லமைச்சர் என்ற வகையில் நான் வருக, வருக, வருக என வரவேற்கிறேன். “பொதுமக்களுக்குச் சேவையாற்று வதே எனது முன்னுரிமை. நாட்டில் உள்ள  அனைவருக்காகவும் நான் பணியாற்று வேன்” என்று சொல்லி தலைமை நீதிபதி யாகப் பதவியேற்றுக் கொண்ட தாங்கள்,  உச்சநீதிமன்றத்தின் பல்வேறு அரசியல் சாசன அமர்வுகளில் இடம்பெற்று,  வர லாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு களில் முக்கியத் தீர்ப்புகளை வழங்கி யிருக்கிறீர்கள். கொரோனா இரண்டாவது அலை யின்போது, அதைக் கட்டுப்படுத்துவதில் நாட்டிலேயே சிறந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு விளங்கியது என்று, தமிழகத்தின் மருத்துவ உட்கட்டமைப்பைச் சுட்டிக்காட்டி தமிழ்நாடு அரசின் செயல்பாடு களை தலைமை நீதிபதியாகிய தாங்கள் பாராட்டியிருந்தீர்கள். அதற்காக நான் இந்த நேரத்தில் நன்றி தெரிவிக்கிறேன்! தொழில்நுட்பம், பதிவகம் மற்றும் நீதித் துறைச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப் படும்”என்று அவர் பொறுப்பேற்றபோது சொன்னதற்கேற்ப, தமிழ் உள்ளிட்ட மாநில  மொழிகளில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு கள் சமீபத்தில் வெளியாகியிருப்பது மிகுந்த  மகிழ்ச்சியளிக்கிறது! இன்றைக்கு சென்னை உயர்நீதி மன்றத்தின் கிளை மதுரையில்  அமைந்தி ருக்கிறது என்றால், அதற்கு அடித்தள மிட்டவர் தலைவர் கலைஞர்.  1973-ஆம் ஆண்டு முதல் முயற்சி செய்து, 2000-ஆம் ஆண்டு முதலமைச்சர் கலைஞர் தலைமையில் அடிக்கல் நாட்டி, தென் மாவட்ட மக்களின் கனவை கலைஞர் நன வாக்கினார். இன்று அந்த மாபெரும் கட்டடம் கம்பீரமாக நிற்கிறது.

உயர்நீதிமன்றங்கள் மற்றும் உச்ச  நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள் நியமனம்,  உச்சநீதிமன்ற பெஞ்சில் மாநிலங்களுக் கான விகிதாச்சார மறுசீரமைப்பு ஆகிய வற்றில் சமூக நீதியை உறுதி செய்ய வேண்டும். சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆங்கிலத்துடன் தமிழையும் நீதிமன்ற மொழியாக அனுமதிக்க வேண்டும். இந்த விஷயத்தில், ஒன்றிய சட்ட அமைச்சர் இந்தக் கோரிக்கைக்கு ஆதரவாக இருப்ப தாக அறிகிறேன். அதற்காக ஒன்றிய சட்ட அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.   ஆங்கிலத்துடன் தமிழையும் நீதிமன்ற  மொழியாக்கும் கோரிக்கையை தலைமை  நீதிபதி பரிசீலிக்க வேண்டும். குறைந்த பட்சம் சென்னை, மும்பை மற்றும் கொல்கத்தா நகரங்களில் உச்ச நீதிமன்ற பெஞ்சுகளை நிறுவ வேண்டும். இந்தக் கோரிக்கைகள் குறித்து ஒன்றிய அரசுக்கு ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளோம். தமிழக  அரசின் இந்தக் கோரிக்கைகளை பரி சீலிக்க வேண்டும். ஒன்றிய அரசும், நீதித்துறையும், உச்ச நீதிமன்றமும் நிறைவேற்றித் தர வேண்டும். நீதித்துறை சுதந்திரமாகவும், தன்னிச்சை யாகவும் இயங்கி ஒவ்வொரு சாமானிய னின் இறுதி நம்பிக்கையையும் காப்பாற் றட்டும். அப்போதுதான் நீதித்துறையின் செயல்பாடுகள் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும். சட்ட நீதியும், சமூக நீதியும் இணைந்து கிடைக்க நீதித்துறை அமைப்புக் கள் வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். இந்நிகழ்வில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி,  டி.ஒய்.சந்திரசூட், ஒன்றிய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் வெ. ராமசுப்பிரமணியன், சுந்தரேஷ், சென்னை உயர்நீதிமன்ற தலைமைப் பொறுப்பு நீதிபதி டி.ராஜா, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன், தமிழக  சட்ட அமைச்சர் ரகுபதி உள்ளிட்ட தமிழக  அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பி னர்கள், மதுரை ஆட்சியர், வழக்கறி ஞர்கள் கலந்து கொண்டனர்.

;