tamilnadu

img

தமிழக தேர்வர்களுக்கு வாசலை அடைக்கலாமா? - சு.வெங்கடேசன் எம்.பி

தமிழக தேர்வர்களுக்கு வாசலை அடைக்கலாமா என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஸ்டாப் செலேக்‌ஷன் கமிஷனின் Combined Graduate level (Tier 1) தேர்வுகள் டிசம்பர் 1 முதல் 13-ஆம் தேதி வரையிலும், இந்திய வானிலை ஆய்வு மையத்தில் Scientific Assistant பதவிக்கான தேர்வுகள், டிசம்பர் 14 முதல் 16 வரையிலும் நடைபெறும் என்று மத்திய தேர்வாணையம் அறிவித்துள்ளது. அதே தேதிகளில் தமிழக கல்லூரிகளில் முதுகலைப் பட்ட செமஸ்டர் தேர்வுகள் நடக்க இருப்பதால், இந்த பணி நியமன தேர்வுகளில் மாணவர்கள் பங்கேற்க இயலாத நிலை உள்ளது. இந்த நிலையில், தேர்வு தேதிகளை மாற்றக் கோரி ஸ்டாப் செலேக்‌ஷன் கமிஷனுக்கும், இந்திய வானியல் துறைக்கும் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.
மேலும், கடந்த காலங்களில் இந்த தேர்வுகளில் தமிழகத்திற்கு உரிய நியாயம் கிடைக்கவில்லை என்றும், 2022-ல் வாசலே இழுத்து மூடப்படுவது போல தேதிகள் உள்ளதாகவும், எனவே தேர்வு தேதிகளை மாற்றக் வேண்டும் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 

;