tamilnadu

img

அறிவியல் கதிர்

♦ மனிதர்களுக்கு அஞ்சும் மலைச்சிங்கங்கள் 
மனித வாழ்விடங்கள் அதிகரித்துக் கொண்டே போவது விலங்கினங்களை எவ்வாறு பாதிக்கின்றது என்பது மலைச்சிங்கங்கள் குறித்த ஒரு ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. மலைச் சிங்கங்கள் சாதாரண சிங்கங்களைவிட சிறியவை. அமெரிக்க கலிபோர்னியா மாநிலத்தில் 2018ஆம் ஆண்டு ஏற்பட்ட தீ, 35000 ஹெக்டேர் மலைப் பிரதேசங்களை அழித்துவிட்டது. 300000 மக்கள் வெளியேற்ற பட்டனர்.அத்துடன மலைச்சிங்கங்கள் உட்பட பல்வேறு விலங்குகளும் வெளியேறின. தீ எவ்வாறு அவற்றின் நடத்தையை மாற்றுகிறது என்பதை அறிய 11 மலைச்சிங்கங்களுக்கு கண்காணிப்புப் பொறிகள் பொருத்தப்பட்டன.அவற்றில் ஒன்பது பாதுகாப்பான பகுதிக்கு சென்றுவிட்டன. எவ்வளவுதான் இடம் மாறிச் சென்றாலும் அவை மனிதர்களை தவிர்த்தன. ஒன்று மட்டும் மனித குடியிருப்பிற்கு அருகில் வந்துவிட்டது. தீயா, மனிதர்களா என்ற பிரச்சினையில் அது மீண்டும் எரிந்து கொண்டிருக்கும் பகுதிக்கே சென்று அழிந்துவிட்டது. ஒன்பது சிங்கங்கள் மற்றும் தீக்குப் பிறகு கண்காணிப்புப் பொறிகள் பொருத்தப்பட்டவைகளிலிருந்து பெறப்பட்ட தரவுகளை வைத்து பொதுவாக மலை சிங்கங்கள அதிகம் எரிந்த பகுதியை தவிர்த்தன என்கிறார் உயிரியலாளர் ரேச்சல் பிளாகே ஏனெனில் மறைந்திருந்து இரைகளை தாக்குவதற்கான தாவரப் பகுதி இல்லாமல் போயிற்று. அவை மனிதர்களை தவிர்த்தும் எரியாமல் இருந்த பகுதிக்குள்ளேயும் வசித்து வந்தன. மனிதக் கட்டமைப்புகள் இருந்த பகுதியில் அவை சாலைகளைக் கடக்கும் அபாயத்தை அதிக அளவில் கைக்கொண்டன. இருவழிச்சாலைகளில் மாதத்திற்கு மூன்று முறை சாலைகளை கடந்த அவை இப்போது ஐந்து முறை கடந்தன. பத்துவழிச்சாலைகளில் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை கடக்கும் பழக்கம் கொண்ட அவை இப்போது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை கடந்தன. பொதுவாக இரவு நேர விலங்குகளான அவை, இப்போது பகல் நேர நடவடிக்கைகளை பத்திலிருந்து பதினாறு சதவீதம் வரை அதிகரித்தன. இது மனிதர்களுடனான மோதலை அதிகரித்தது. மனிதர்களை சந்திப்பதை விட சாலைகளை கடப்பது என்கிற முடிவு அவற்றின் உயிருக்கு அதிக ஆபத்தாகும். சாலைகளின் மேல் காட்டு உயிரினங்கள் கடந்து செல்ல பாதை அமைக்கும் முயற்சி அவைகளுக்கு நம்பிக்கையைக் கொடுக்கலாம். இது ஒரு கூட்டத்தி லிருந்து இன்னொரு கூட்டத்திற்கு மரபணுக்கள் கலப்பதற்காக செய்யப்பட்டதாக இருந்தாலும் தீ,மனிதர்கள்,நெடுஞ்சாலைகள் கொண்ட நிலப்பரப்பில் ஓடுவதற்கு எங்காவது ஒரு இடம் கிடைப்பது நல்லதுதானே.

♦ உயிர் திசுக்களை அச்சிடும் 3D பிரிண்டர் 
சென்னை ஐஐடிமேனாள் மாணவர் ஒருவர் கூட்டாக தொடங்கிய ஆவே உயிர்அறிவியல் (Avay Bio Sciences)என்கிற நிறுவனம் மனித திசுக்களை அச்சிடக்கூடிய 3Dகருவியை வடிவமைத்துள்ளனர். இதற்கு மிட்டோ பிளஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. பெங்களூரிலுள்ள இந்திய அறிவியல் கழகத்தை சேர்ந்த உயிர் அறிவியல் கருவி சிறப்பு பேராசிரியர் பிக்ரம்ஜித் பாசுவின் சோதனை சாலையில் ஏற்கனவே வடிவமைக்கப்பட்ட கருவியின் மேம்பட்ட வடிவம் இது. இதில் வேதியியல் தொழில்நுட்பக் கழகம்,மருந்துக் கல்வி நிறுவனம்,பிட்ஸ் பிலானி ஆகியவை கூட்டாக இணைந்துள்ளன. இந்தக் கருவியில் உயிர்த்திருக்கும் செல்கள் போன்ற உயிரியல் சாதனங்களைப் பரப்பி தோல்,ஈரல் போன்ற சிக்கலான உறுப்புகளை கட்டமைக்கலாம்.இது முழுவதும் செயல்பாட்டிற்கு வருவதற்கு முன்னால் பல சவால்களை சமாளிக்க வேண்டும் என்கிறார் ஆவே நிறுவனத்தின் முதன்மை அலுவலர் மனிஷ் அமின். இதன் மூலம் தயாரிக்கப்படும் தோல், தீ விபத்து நோயாளிகளின் சிகிச்சையில் உதவும்;நச்சியலில் பயன்படுத்தப்படும் திரைகள் மற்றும் வேறு பல சோதனைகளிலும் இந்த திசுக்கள் பயன்படும் என்கிறார் ஐஐடி சென்னை விண்வெளி தொழில்நுட்பத் துறையின் முதன்மை செயல் அலுவலரும் மேனாள் மாணவருமான சுப்ரித் சுந்தரம். பலவகையான உயிரியல் கருவிகளை இதன் மூலம் அச்சிட முடியும்.அவை மருந்தியல் துறையில் புதிய மருந்து கண்டு பிடிப்புகள், மருந்துகளை சோதனை செய்து பார்த்தல் ஆகியவற்றில் பயன்படும்.இது தவிர புற்று நோய்,சரும இயல் ஆகியவற்றிலும் பயன்படும்.

♦ வண்ணத்துப் பூச்சிகளின் இருண்ட பக்கங்கள்

நம்மில் பெரும்பாலோருக்கு வண்ணத்துப் பூச்சிகள் ஒரு அழகிய, மென்மையான, எந்த வித தீங்கும் விளைவிக்காத, உற்சாகமூட்டக்கூடிய உயிரினம்.ஆனால் அவற்றிற்கும் இன்னொரு இருண்ட பக்கம் உள்ளது என்கிறார் பறவை அவதானி சுனில் ராஜகோபால். வண்ணத்துப் பூச்சிகள் தேனை மட்டுமே உண்டு எப்படி வாழ முடியும்? அவை உயிர் வாழத் தேவையான பிற வேதிப்பொருட்களைப் பெற வேண்டாமா?ஆகவே  உப்பு,சோடியம்,அமினோ அமிலம் போன்றவற்றை ஈரமான தரை,சகதி,அழுகும் பழங்கள்,இறந்த விலங்குகள், சிறுநீர், இரத்தம், வேர்வை,கண்ணீர் ஆகியவற்றிலிருந்து  உண்கின்றன.அதன் கால்களில் உள்ள சுவை உணர்விகளைக்கொண்டு இந்த தேடுதலை நடத்துகின்றன. சில வண்ணத்துப் பூச்சி இனங்கள் அழுகும் சடலங்களை நீண்ட தூரத்திலிருந்து கண்டறிந்து அதன் சாறை அருந்தும் வகையில் படி வளர்ச்சி அடைந்துள்ளன. அவை ஒன்றுக்கொன்று சண்டையிடும் தன்மை கொண்டவை. ஆண் பூச்சி பெண் பூச்சியை துரத்துவதும் அது நிராகரிக்கப்படுவதும் நடைபெறுகிறது.நல்ல ருசியான தோட்டத்திலிருந்து ஒரு கூட்டம் இன்னொரு கூட்டத்தை துரத்தும். அப்பொழுது தங்கள் இறகுகளால் சண்டையிடும். நாம் மென்மையானவை என்று கருதும் இறகுகள் ஆயுதங்களாக மாறுகின்றன. நச்சு தாவரங்களை சார்ந்து வாழும் சில இனங்கள் படிநிலை வளர்ச்சியின் காரணமாக நச்சுத் தன்மை கொண்டவையாக மாறியுள்ளன. வண்ணத்துப் பூச்சியாக மாறுவதற்கு முன்பருவமான கம்பளிப்புழு நிலையில் உள்ளவைகளை உறிஞ்சி தங்களுக்குத் தேவையான வேதிப்பொருட்களை  குடிக்கும் மில்க் வீட் இனப் பட்டாம் பூச்சிகளும் உள்ளன.

;