tamilnadu

img

சிபிஎம் தென்சென்னை மாவட்டச் செயலாளராக ஆர்.வேல்முருகன் தேர்வு

சென்னை, நவ. 29 - மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தென் தென்னை மாவட்டச் செய லாளராக ஆர்.வேல் முருகன் தேர்வு செய்யப் பட்டார். கட்சியின் தென் சென்னை மாவட்ட 23ஆவது மாநாடு நவ.27, 28 தேதி களில் தோழர் மைதிலி சிவ ராமன் நுழைவு வாயில், தோழர் க.வெ.ராதாகிருஷ்ணன் ( ஆண் டாள் திருமண மண்டபம், அடையாறு) நினைவரங்கில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், பாதாள சாக்கடை முதல் மழைநீர் வடிகால்வாய் வரை மனிதர்களை இறக்கி சுத்தம் செய்யும் போது  ஏற்படும் மரணங்களை ‘மனித கழிவை சுத்தம் செய்தல் தடுப்புச் சட்டம் - 2013ன் கீழ் கொண்டு வந்து நிவாரணம் வழங்க வேண்டும்.

சுற்றுச்சூழலுக்கு குறைவான பாதிப்பை ஏற்படுத்தும் புதிய தொழில்நுட்ப மின் நிலையங்களை அமைக்கவேண்டும். அரசமைப்புச் சட்டப்படி அணுஆற்றல் ஒழுங்கமைப்பு வாரியம் அமைக்கும் வரை  தமிழகத்தில்  புதிய அணு உலைகள் நிறுவு வதை ஒத்தி வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள்  நிறை வேற்றப்பட்டன. பொதுமாநாட்டிற்கு மாவட்டச் செயற்குழு உறுப்பினர் க.வனஜகுமாரி  தலைமை தாங்கினார்.  செங்கொடியை மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.கிருஷ்ணன் மூர்த்தி ஏற்றினார். கண் காட்சியை மாநிலக்குழு உறுப் பினர் க.பீம்ராவ் திறந்து வைத்தார். வரவேற்பு க்குழுத் தலைவர் எஸ்.விஜயன் வரவேற்றார். அஞ்சலி தீர்மா னத்தை செயற்குழு உறுப்பி னர் எஸ்.வெள்ளைச்சாமி வாசி த்தார். மாநாட்டை தொடங்கி வைத்து மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் பேசினார்.

பிரதிநிதிகள் மாநாட்டில் அரசியல் - அமைப்பு அறிக்கையை மாவட்டச் செய லாளர் ஏ.பாக்கியமும், நிதி நிலை அறிக்கை யை ஜி.செந்தில்குமாரும் சமர்ப்பித்தனர். மாநாட்டை நிறைவு செய்து மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் பேசினார். வேளச்சேரி பகுதிச் செயலாளர் எஸ்.முகமது ரஃபி நன்றி கூறினார்.

புதிய மாவட்டக்குழு

மாநாட்டில், 36 பேர் கொண்ட புதிய மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது.  மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக க. பீம்ராவ், ஏ. பாக்கியம், ஆர். வேல்முரு கன், கே. வனஜகுமாரி, சு. வெள்ளைச் சாமி, எஸ். குமார், ச. லெனின், ஜி. செந்தில்குமார், பா. பாலகிருஷ்ணன், ம. சித்ரகலா, டி .சுந்தர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
 

;