tamilnadu

தடுப்பூசி தயாரிப்பாளர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு

புதுதில்லி, அக்.23- இந்தியாவில் 100 கோடி தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றாலும் 29.4 கோடிப் பேர் மட்டுமே இரண்டு தவணை தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டுள்ளனர். இது 21.3 சதவீதம் மட்டுமே. இந்த நிலையில் பிரதமர்  மோடி சனிக்கிழமையன்று கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் ஏழு தடுப்பூசி உற்பத்தியாளர்களை சந்தித்தார். சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, பாரத் பயோடெக், டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டரீஸ், சைடஸ் காடிலா, பயோலா ஜிக்கல் இ, ஜென்னோவா பயோஃபார்மா மற்றும் பனே சியா பயோடெக் ஆகிய ஏழு தடுப்பூசி தயாரிப்பாளர்களின் பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். இந்தச் சந்திப்பில் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா மற்றும் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

;