tamilnadu

img

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் ஆவணத்தில் யோகி சிலை படம் - சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்

இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் ஆவணத்தில் யோகி சிலை படத்தை பயன்படுத்தியதற்கு மதுரை நாடாளூமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்திய விமான நிலையங்கள் ஆணையம் சமீபத்தில் கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான ஆவணத்தை வெளியிட்டது. இதில் ஒவ்வொரு மாநிலங்களிலும் விமான நிலையங்களில் பின்பற்றப்பட வேண்டிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பட்டியலிட்டுள்ளது.

மேலும், தமிழ்நாட்டைக் குறிப்பிடும் பகுதியில் கோவை ஜக்கி வாசுதேவின் யோகி சிலை படத்தை வைத்துள்ளது. இதற்கு மதுரை நாடாளூமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி தனது ட்விட்டர் பக்கத்தில், மாநிலங்களில் தனிமைப்படுத்துதல் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த ஆவணத்தில் தமிழ்நாட்டின் அடையாளமாக ஜக்கி வாசுதேவின் யோகி சிலையை வைத்துள்ளது இந்திய விமான நிலையங்கள் ஆணையம். வன்மையான கண்டனம். உடனே மாற்று எனத் தெரிவித்துள்ளார்.

;